தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

18.4.12

திறந்த நிலை பல்கலை பட்டப் படிப்பு - அரசு வேலைக்கு பரிசீலனை செய்வது குறித்து ஆலோசித்து, நடவடிக்கை

திறந்த நிலை பல்கலையில், நேரடியாக படித்து பட்டம் பெற்றவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்புகள் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் கூறினார்.

சட்டசபையில், நேற்று உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம்:

பாலபாரதி: திறந்தநிலை பல்கலையை, தமிழக அரசு தான் நடத்துகிறது. ஆனால், இங்கு படிப்பவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந்த நிலை மாறுமா?

அமைச்சர்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்தபின், திறந்த நிலையில் பட்டப் படிப்பு படிப்பவர்களுக்கு, எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, முறையான கல்விக்கு மாறாக, நேரடியாக பட்டப்படிப்பு படிப்பவர்களுக்குத் தான், அரசு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இப்படிப்பட்டவர்களையும், அரசு வேலை வாய்ப்புகளில் பரிசீலனை செய்வது குறித்து ஆலோசித்து, நடவடிக்கை எடுக்கப்படும்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்