தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

3.4.12

டி. இ. டி., தேர்வுக்காக இயக்குநர், இணை இயக்குநர் பணியிடம்; தனி நிர்வாக அமைப்பை ஏற்படுத்தி அரசு உத்தரவு

ஆசிரியர் தேர்வு வாரியத்தில், டி.இ.டி., தேர்வை மட்டும் நடத்துதல், தேர்வு முடிவுகளை வெளியிடுதல் உள்ளிட்ட பணிகளை கவனிப்பதற்காக, தனி இயக்குனர், துணை இயக்குனர் உள்ளிட்ட பல பணியிடங்களை புதிதாக ஏற்படுத்தி, தமிழக அரசு உத்தரவிட்டது.

அரசாணை விவரம்:
  •  டி.இ.டி., தேர்வுக்கென, உறுப்பினர் (இயக்குனர் நிலை); துணை இயக்குனர் (சி.இ.ஓ., நிலை); கணக்கு அலுவலர், கண்காணிப்பாளர் என, தலா ஒருவர்; நேர்முக உதவியாளர்கள் இருவர்; இளநிலை உதவியாளர்கள் மூவர் என, ஒன்பது பணியிடங்களை புதிதாக தோற்றுவித்து, தமிழக அரசு, அரசாணை பிறப்பித்துள்ளது.
  • இந்த பணியிடங்களை, "அயல் பணி' (டெபுடேஷன்) முறையில், ஒரு ஆண்டு வரை பணியாற்றும் வகையில், பள்ளிக் கல்வித் துறையில் இருந்து நியமிக்கவும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  • கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் தலா இருவர் மற்றும் இதர பணியாளர்கள் 10 பேரை, தற்காலிக அடிப்படையில், ஆறு மாதங்களுக்கு பணியாற்றும் வகையில், பணி நியமனம் செய்யவும், தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
  • மேலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள, உதவியாளர்கள் மூவர், ஸ்டெனோ - டைப்பிஸ்ட் மற்றும் உதவியாளர் தலா ஒருவர் என, ஐந்து பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க, பள்ளிக் கல்வித் துறை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.
நியமனம் எப்படி?
கல்வித் துறையில் பணியாற்றும் அதிகாரிகளில் ஒருவரையோ அல்லது பதவி உயர்வு மூலமோ ஒருவரை உறுப்பினர் பதவியில் நியமிக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. துணை இயக்குனர் பணியிடமும், இதேபோல் நிரப்பப்பட உள்ளது. இயக்குனர் நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தில், உறுப்பினர் - செயலராக பணியாற்றி வந்த வசந்தி ஜீவானந்தம், மார்ச் 30ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, இயக்குனர் நிலையில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, இரண்டாக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே, பாடநூல் கழகச் செயலர் பதவியை, மத்திய இடைநிலைக் கல்வி திட்ட இயக்குனர் இளங்கோவன், கூடுதலாக கவனித்து வருகிறார். இந்த பணியிடத்துடன், தற்போது புதிதாக, டி.இ.டி.,க்கென ஏற்படுத்தப்பட்ட இடத்துடன் சேர்த்து, இயக்குனர்கள் காலிப் பணியிடங்கள், மூன்றாக அதிகரித்துள்ளது. மேலும், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர் கருணாகரன், ஏப்ரல் இறுதியில் ஓய்வு பெறுகிறார். எனவே, இம்மாத இறுதிக்குள், இயக்குனர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை நான்காக இருக்கும்.

மூன்று பேருக்கு பதவி உயர்வு

பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குனர்களாக பணியாற்றி வரும் ராமேஸ்வர முருகன் (இடைநிலைக் கல்வி) மற்றும் மோகன்ராஜ் (தொழிற்கல்வி), நூலகத் துறை இணை இயக்குனர் பிச்சை ஆகிய மூன்று பேரையும், இயக்குனர்களாக பதவி உயர்த்த, தமிழக அரசு ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது, மேலும் ஐந்து இணை இயக்குனர்களுக்கு பதவி உயர்வு வழங்க அனுமதி கேட்டு, அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனுமதி கிடைத்ததும், இவர்களில், சீனியாரிட்டிபடி முதலில் உள்ள ஒருவர், மேற்கண்ட மூன்று பேருடன் சேர்த்து, இயக்குனராக நியமிக்கப்படுவார்.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்