தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

17.5.11

அச்சத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள்; செலவின பட்டியல் கேட்குது தணிக்கை துறை

தமிழகத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளின் பராமரிப்பு செலவினங்களின் பட்டியலை, தணிக்கைத் துறை சேகரித்து வருகிறது.

தமிழகத்தில், 632 அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள், 1,120 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலர்களின் சம்பள விவரம், இதர படிகள் குறித்த விவரங்கள், பள்ளி பராமரிப்பு பணிகளுக்கான செலவினம் என, அனைத்து விவரங்களையும், மாநில தணிக்கைத் துறை சேகரித்து வருகிறது.

கடந்த 2004 முதல் 2010 கல்வியாண்டுக்கான செலவினங்களை, ஆண்டு வாரியாக பட்டியலிட்டு அனுப்பி வைக்கும்படி, அந்தந்த பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம், பட்டியல் தயாரித்து வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், பள்ளி செயலர்கள் மூலமாகவும், செலவினங்கள் குறித்து அறிக்கையை, மாநில தணிக்கைத் துறைக்கு நேரடியாக அனுப்பி வைக்கும்படியும், பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 

கடந்த கால செலவின பட்டியலை தணிக்கைத் துறை கேட்டுள்ளதால், அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகங்கள் அச்சத்தில் உள்ளன.

நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்