"கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் 9 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்கும் பொருட்டு, ஊரக திறனாய்வு தேர்வு செப்., 18ம் தேதி நடக்கும்,'' என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்தார்.
கிராமப்புற மாணவர்கள் மேல்நிலை கல்வியைத் தொடர, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படும். இதில், மாவட்ட வாரியாக அதிக மதிப்பெண் பெறும், முதல் 50 மாணவர்கள், 50 மாணவியருக்கு உதவித் தொகை வழங்கப்படும்.
இக்கல்வியாண்டிற்கான ஊரக திறனாய்வு தேர்வு செப்., 18ல் நடக்கிறது. இதற்கான விண்ணப்பம், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் உள்ளது. இவற்றை 10 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளவும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வருமானச் சான்று இணைத்து, ஆக., 10ம் தேதிக்குள் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
வருமானம் அதிகரிப்பு: இத்தேர்வை எழுத, 2010 - 2011ம் ஆண்டு பொதுத் தேர்வில் 8ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம், கடந்த ஆண்டு வரை 12,000 ரூபாயாக இருந்தது. இக்கல்வி ஆண்டு முதல் ஒரு லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கான வருமானச் சான்றை பெற்று சமர்ப்பிக்க வேண்டும். நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் வசிக்காத கிராமப்புற மாணவர்கள் மட்டுமே ஊரக திறனாய்வு தேர்வை எழுத முடியும். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆண்டிற்கு 1,000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என, உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""கிராமப்புற மாணவர்கள் மேல்நிலைக் கல்வி பெறும் வகையில் அரசு நல்ல திட்டத்தை செயல்படுத்துகிறது. அதுவும், இந்த ஆண்டு முதல் குடும்ப ஆண்டு வருமானத்தை ஒரு லட்ச ரூபாயாக உயர்த்தியது, இத்தேர்வை அதிக மாணவர்கள் எழுத வாய்ப்பு கிடைக்கும்,'' என்றார்.
நன்றி:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக