சட்டசபை தேர்தல் பணியில் நேரடியாக பாதித்த பிரச்னைகள் மற்றும் ஓட்டுப்பதிவை மேம்படுத்த கூடிய அம்சங்கள் குறித்து ஓட்டுச் சாவடி தலைமை அலுவலர்களிடம் தேர்தல் கமிஷன் "அதிரடி" கருத்துக்களை கேட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த மாதம் 13ம் தேதி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இத்தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை வரும் 13ம் தேதி நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் தீவிரமாக செய்து வருகிறது. ஓட்டு எண்ணிக்கையை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு முதற்கட்டமாக மண்டல அளவில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனையடுத்து தொகுதி வாரியாக ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த 13ம் தேதி நடந்த சட்டசபை தேர்தல் பணி குறித்து அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுச் சாவடி தலைமை அலுவலர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொகுதிகளில் இதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஓட்டுச் சாவடி தலைமை அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு கருத்துக்கள் கேட்கப்படுகிறது. இந்த கருத்துக்களை தெரிவிக்கும் ஓட்டுச் சாவடி தலைமை அலுவலர்களின் பெயர், பதவி, ஓட்டுச் சாவடி எண், சட்டசபை தொகுதி, மாவட்டம் போன்ற விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.
தேர்தல் பணியில் பிரச்னைகள்:
- ஓட்டுப்பதிவு அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டது,
- அலுவலர்களின் விபரங்கள் அடங்கிய தகவல் அமைப்பு உருவாக்கியது
- தேர்தல் பணி ஆணைகள் வழங்கிய விதம்,
- பயிற்சி முறைகள் மற்றும் அதற்கான சாதனங்கள் மற்றும் கையேடுகள் வழங்கிய விதம்,
- ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்ட விதம்,
- மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்த விதம்
- தபால் ஓட்டுக்கான படிவம் 12 வழங்கியது மற்றும் படிவம் திரும்ப பெறப்பட்டது
- தபால் ஓட்டுச் சீட்டு அனுப்பிய விதம்,
- தேர்தல் பணி நியமன ஆணை வழங்கியது
- 3வது பயிற்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட விதம்,
- ஓட்டுச் சாவடியில் உணவு, குடிநீர், கழிப்பறை, மின்வசதி மற்றும் பிற வசதிகளின் விபரம்
இந்த அனைத்து தகவல்களும் மிக நன்று, நன்று, பரவாயில்லை, மோசம் என 4 வகையான பதில்கள் தெரிவிக்கப்பட்டு விபரம் சேகரிக்கப்படுகிறது. இந்த விபரங்களுடன் ஏதாவது ஆலோசனைகள் இருந்தால் அதனையும் தெரிவிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுப்பதிவை அதிகரிக்க...:
ஓட்டுப்பதிவன்று ஓட்டுப்பதிவை மேம்படுத்த கூடிய அம்சங்கள் என்ற தலைப்பில்
- ஓட்டுச் சாவடி நிலை அலுவலரால் நடத்தப்பட வேண்டிய வாக்காளர் உதவி மையம் ஓட்டுப்பதிவு தினத்தன்று இயங்கியதா,
- வாக்காளர் சீட்டு வழங்கியது ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு உதவியாக இருந்ததா,
- ஓட்டுப்பதிவின் போது மூத்த குடிமக்களுக்கு தனி வரிசை உள்ளது என்பதை அறிவீர்களா,
- ஓட்டுச் சாவடியில் மூத்த குடிமக்களுக்கு தனி வரிசை இருந்ததா
- ஓட்டுப்பதிவின் போது மாற்றுத் திறனாளிகளுக்கு வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை என்ற அறிவீர்களா,
- ஓட்டுச் சாவடியில் இந்த வசதி நடைமுறைப்படுத்தப்பட்டதா,
- மூத்த குடிமக்கள்/மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்கனவே ஓட்டுச் சாவடியில் செய்து தரப்பட்டுள்ள வசதிகளை விட இன்னும் அதிக வசதிகள் தேவையா,
- ஆம் எனில் என்னென்ன வசதிகள் வேண்டும்.
- பார்வையற்ற வாக்காளர்கள் எத்தனை பேர் தங்களது ஓட்டுச் சாவடியில் ஓட்டு போட்டனர்,
- அவர்களில் எத்தன பேர் பிரெய்லி வசதியை பயன்படுத்தினர்,
- ஓட்டுச் சாவடி முகவர்கள் ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு நெருக்குதல், இடையூறு ஏதும் கொடுத்தார்களா,
- ஆம் எனில் அதனை எவ்வாறு எதிர்கொண்டீர்கள்,
- ஓட்டுச் சாவடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்ததா,
- இக்கேமரா ஓட்டுப்பதிவில் ஆள் மாறாட்டத்தை தடுக்க உதவியதா,
- இல்லை எனில் காரணம்,
- ஓட்டுச் சாவடியில் நுண் பார்வையாளர்கள் ஓட்டுப்பதிவில் ஆள் மாறாட்டத்தை தடுக்க உதவினார்களா,
- இல்லை எனில் காரணம்
- ஓட்டுச் சாவடியில் மிக முக்கிய நபர்கள் ஓட்டு போடும் போது பிரச்னைகளை எதிர்கொண்டீர்களா,
- ஓட்டுப்பதிவின் போது பத்திரிக்øயாளர்கள்/புகைப்படகாரர்கள் முறையாக நடந்து கொண்டனரா, அறிவுரைகளை பின்பற்றினார்களா,
- தேர்தல் பணிக்கு வழங்கப்பட்ட ஊதியம், மதிப்பூதியம் போதுமானதாக இருந்ததா,
- இந்த ஊதியம் தாமதமில்லாமல் வழங்கப்பட்டதா,
- 49 "O" குறித்து விபரம்,
- ஆய்வுக்குரிய ஓட்டுச் சீட்டுகள் குறித்த விபரம்
போன்ற கேள்விகளும் கேட்கப்படுகிறது.
இந்த கேள்விகள் அனைத்தும் ஆம், இல்லை என இரு வகையான விடைகள் அளிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதற்கான காரணங்களை தெரிவிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மொத்தத்தில் ஓட்டுப்பதிவின் போது உங்களது பணி அனுபவம் குறித்தும் விபரம் கேட்கப்படுகிறது. இதில் மிக நன்று, நன்று, பரவாயில்லை, மோசம் என 4 வகையான விடைகள் தரப்பட்டு மோசம் எனில் காரணம், ஏதாவது ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கேட்பின் மூலம் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து மதிப்பிடப்பட்டு வருங்காலத்தில் ஓட்டுப்பதிவின் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்ளவும், ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தேர்தல் கமிஷன் ஆலோசனை செய்து உரிய முடிவுகளை அறிவிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக