தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

8.5.11

சமச்சீர் கல்வி முறையில் சமூக அறிவியல் பாடத்திற்கு கூடுதல் பாடவேளை ஒதுக்க கோரிக்கை

சமச்சீர் கல்வி முறையில் சமூக அறிவியல் பாடத்திற்கு கூடுதல் பாடவேளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பள்ளிகளில் தமிழ், அறிவியல் போல சமூகஅறிவியல் பாடமும் கற்பிக்கப்படுகிறது. இதில் வரலாறு, புவியியல் மற்றும் குடிமையியல் பாடங்கள் உள்ளன. ஆறு முதல் 10ம் வகுப்பு வரை இப்பாடம் கற்பிக்க 5 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.இது குறைவாக உள்ளது. கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டுமென, சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் கருதுகின்றனர். 

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களுக்கு வாரம் 7 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. ஆனால் அவற்றைவிட கூடுதல் பாடங்கள் சமூக அறிவியல் பாடத்தில் உள்ளன. தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள சமச்சீர் கல்வி முறையில், சமூக அறியவிலில், வரலாறு பாடத்தில் பொருளாதாரமும், குடிமையியலில் சட்டம் குறித்தும் கூடுதலாக பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் பாடங்கள் பளு அதிகரித்துள்ளது. இவை தவிர இணைப்பு பாடத்தோடு வரைபடங்கள் (மேப்), காலக்கோடு, சுகாதாரம், களப்பணி ஆகிய பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் சமூக அறிவியல் பாடத்திற்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது.

தமிழ்ப் பாடத்திற்கு ஆரல், ஓரல் தேர்வு உள்ளது. அறிவியல் பாடத்தில் இந்த ஆண்டு செய்முறை தேர்வும் இடம்பெற உள்ளது. இதனால் மதிப்பெண் பெறுவது எளிதாகிறது. ஆனால் சமூக அறிவியல் பாடத்திற்கு இந்த வாய்ப்பு இல்லை. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற உயர் பதவிகளுக்கான போட்டித் தேர்வுக்கு சமூக அறிவியல்தான் அடித்தளமாக உள்ளது. அப்படி இருக்கையில் இதை புறக்கணிக்கும் வகையில் குறைந்தளவில் பாடவேளை ஒதுக்குவதை ஏற்க முடியாது என்கின்றனர் ஆசிரியர்கள். 

சமூக அறிவியல் பாடத்திற்கு கூடுதல் பாடவேளை கேட்டு, பள்ளிக் கல்வி சமூக அறிவியல் கூட்டமைப்பின் சார்பில் 2009, அக்டோபரிலேயே முதல்வரின் தனிப்பிரிவிற்கு தெரிவிக்கப்பட்டு, பள்ளிக் கல்வி இயக்குனருக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கு நடவடிக்கை இல்லை. 

இதையடுத்து அந்தக் கூட்டமைப்பின் கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் கூறுகையில், "சமச்சீர் கல்வி முறையிலாவது கூடுதல் பாட வேளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்," என்றார்.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்