கல்வி, வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.) இட ஒதுக்கீட்டுச் சலுகைகளைத் தொடர்ந்து பெற ஆண்டு வருமானம் அதிகபட்சம் ரூ.4.5 லட்சம் வரை இருக்கலாம் என்ற இப்போதைய வரம்பை ரூ.6 லட்சம் வரையில் உயர்த்துவது என்ற முடிவை மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு வியாழக்கிழமை ஒத்திவைத்தது. இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்.
சமூக நீதி - அதிகாரமளித்தல் அமைச்சகம் அனுப்பியிருந்த பரிந்துரையில் இந்த ஊதிய உச்சவரம்பு ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்றே கூறியிருந்தது. ஆனால் மத்திய அரசு அந்தப் பரிந்துரையை நிராகரித்தது. அதே சமயம் இந்த உச்சவரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. என்ன காரணத்தாலோ இந்த அளவும் ஏற்கப்படவில்லை.
விலைவாசி உயர்வாலும் மக்களின் வாழ்க்கைத்தரச் செலவுகளும் உயர்ந்து வருவதால் இந்த உச்ச வரம்பை ஆண்டுக்கு 12 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று அமைச்சகம் பரிந்துரைத்தது. மத்திய அரசின் வேலைகளிலும் ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கப்படும் இடங்கள் இந்த வருவாய் உச்ச வரம்பு குறைவாக இருப்பதன் காரணமாக நிரப்பப்படாமலேயே வீணாகின்றன என்பதால் இதை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த உச்ச வரம்பு ரூ.2.5 லட்சமாக இருந்தது 2008-ல் ரூ.4.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. நகர்ப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களாக இருந்தால் அவர்களுடைய அதிகபட்ச குடும்ப வருமானம் ரூ.12 லட்சமாகவும் கிராமப்புறமாக இருந்தால் ரூ.9 லட்சமாகவும் இருக்கலாம் என்று அமைச்சகம் பரிந்துரைக் குறிப்பு அனுப்பியது.
எஸ்.சி. மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை திட்டம்:
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 9-வது 10-வது வகுப்புகளில் பயிலும்போதே அவர்களுடைய கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டம் தேவை என்று அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பள்ளிக்கூட படிப்புக் கட்டணத்தைச் செலுத்துவதுடன் உயர்ந்துவிட்ட பாடப்புத்தக, நோட்டுப்புத்தகச் செலவுகளையும் கணக்கில் கொண்டு உதவித் தொகையைக் கணிசமாக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. (அந்தத் தொகை எவ்வளவு என்று அரசின் தகவலில் குறிப்பிடப்படவில்லை).
நன்றி:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக