வெள்ளிக்கிரகம் சூரியனை, மறைத்துச் செல்லும் நிகழ்வை, ஆசிரியர்களுக்கு விளக்கும் பயிற்சி, மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நாளை (ஜூன் 4) நடக்கிறது. ஜூன் 6ல், காலை 7 முதல் 10.20 மணி வரை, மதுரையில் இந்நிகழ்வை பார்க்கலாம். இதுபோல ஒரு நிகழ்வு, 100 ஆண்டுகளுக்கு பின் நடக்கும். இதை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது என அறிவியல் இயக்க செயலாளர் கடசாரி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: கறுப்பு அட்டையின் நடுவில் துளையிட்டு, கையளவுள்ள சிறிய கண்ணாடி மீது ஒட்ட வேண்டும். இதை சூரிய ஒளிக்கு நேராக வைத்து, துளையின் வழியாக வரும் ஒளியை, இருட்டான அறையை நோக்கி செலுத்த வேண்டும். அப்போது வட்டத் தட்டில் கடுகு நகர்வது போல, வெள்ளி கிரகம் நகர்வது தெரியும். சிறு பாத்திரத்தில் மணலை நிரப்ப வேண்டும். சிறிய பிளாஸ்டிக் பந்தின் மேல் கறுப்பு அட்டை ஒட்டிய சிறு கண்ணாடியை "டேப்பால்' ஒட்டி, மணல் மேல் வைக்க வேண்டும். அட்டையின் துளையின் வழியாக வெளிச்சத்தை அறையில் செலுத்த வேண்டும். திசைக்கேற்ப பந்தை சற்றே நகர்த்தலாம். பள்ளிகளில் மாணவர்களுக்கு இந்நிகழ்வை கற்றுத் தருவதற்காக, ஆசிரியர்களுக்கு மதியம் 2 முதல் 4 மணி வரை பயிற்சி அளிக்கிறோம். பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம், என்றார்.
நன்றி:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக