தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

19.6.12

இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தடை நீக்கம் : ஐகோர்ட் உத்தரவு

இடைநிலை ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்ற ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பிற்கு விதித்த தடையை நீக்கி, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி ஜஸ்டின் பிரபாகர் தாக்கல் செய்த மனு:
நான் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன். சுப்ரீம் கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து, மாநிலப் பதிவு மூப்பு அடிப்படையில், இடை நிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழகப் பள்ளிக் கல்வித் துறை, 2011 நவ., 15ல், அரசாணை - 181 வெளியிட்டது. அதில், "பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு அடிப்படையில் நியமிக்கப்படுவர். இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில், மாநிலப் பதிவு மூப்பு தொடர்ந்து பின்பற்றப்படும்' என தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம், இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு தகுதித் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை.

ஆசிரியர் தேர்வு வாரியம், 2012, மார்ச் 7ல், "அரசு உதவி பெறும் மற்றும் அரசு உதவி பெறாத பள்ளிகளில், 2010 ஆக., 23க்கு பின் இடைநிலை அல்லது பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தால், அவர்கள் தகுதித்தேர்வு எழுத வேண்டும்' என, அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது, ஏற்கனவே வெளியான அரசாணை, 181க்கு முரணானது. இடைநிலை ஆசிரியர் பணிக்கு, தகுதித்தேர்வு எழுத வேண்டும் என்ற தேர்வு வாரிய அறிவிப்பை ரத்து செய்ய, உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 இதேபோல், திருநெல்வேலி புதூரை சேர்ந்த ஜெயக்குமார் மற்றொரு மனு தாக்கல் செய்தார்.இம்மனுக்கள், ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதி, ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பிற்கு, இடைக்காலத் தடை விதித்தார்.

நேற்று மனு, நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்ல பாண்டியன், சிறப்பு வழக்கறிஞர் சம்பத்குமார், அரசு வழக்கறிஞர் பாரதி ஆஜராகினர்.

நீதிபதி உத்தரவு:
தடையால், இடைநிலை ஆசிரியர் தேர்வு நடைமுறைகள் பாதிக்கப்படும். அரசின் அறிவிப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது. இடைநிலை ஆசிரியர் தேர்வு நடைமுறைகளை வழக்கம்போல் மேற்கொள்ளலாம். மனுதாரர்களை பொறுத்தவரை, அவர்களின் மனுக்களை, அரசு பரிசீலிக்க வேண்டும். அவர்களுக்காக, இரண்டு இடங்களை காலியாக வைத்திருக்க வேண்டும். விசாரணை ஜூலை 6க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்