"வருமான வரி சட்டங்கள் குறித்தும், தேசிய கட்டமைப்புக்கு தேவையான வரிகளின் முக்கியத்துவம் குறித்தும் பள்ளிக் குழந்தைகளுக்கு போதிக்கும் வகையில், இது தொடர்பான விவரங்கள் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது,'' என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
டில்லியில் வருமான வரி உயரதிகாரிகள் கூட்டத்தில், அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது:
வரிகள் விதிப்பது, தேசிய கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு மிகவும் அவசியம். வரி சட்டங்களை மக்கள் தானாகவே முன்வந்து ஏற்றுக்கொள்வது ஊக்கப்படுத்தப்பட வேண்டும். மேலும், இந்த விஷயத்தில் குழந்தைகளின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். அதற்கு, வரிகளின் முக்கியத்துவம் குறித்து பள்ளிக் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும்.
இது தொடர்பான விவரங்கள் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம் பெற வேண்டும். அதற்கு என்.சி.இ.ஆர்.டி., அமைப்புடன் சேர்ந்து வருமான வரித்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.கணக்கில் வராத சொத்துக்கள் மற்றும் வருமானம் குறித்த ஆய்வு ஒன்றை, மத்திய அரசு துவக்கியுள்ளது. இந்த ஆய்வுப் பணி, செப்டம்பர் மாதத்தில் முடிவுக்கு வரும். அத்துடன் கறுப்பு பணம் தொடர்பான தற்போதைய சட்டங்களை பலப்படுத்துவது தொடர்பாக, கமிட்டி ஒன்று தெரிவித்த அறிக்கையையும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.
நன்றி:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக