தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

12.6.12

பள்ளி மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு' பஸ் பாஸ்

பள்ளி மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு' பஸ் பாஸ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

மாணவர்களுக்கு அரசு டவுன் பஸ்களில் செல்ல தமிழக அரசு சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. அட்டை வடிவில் உள்ள பாஸை, மாணவர்கள் கல்வி ஆண்டு முழுவதும் பத்திரமாக வைத்திருக்க முடியவில்லை. இரண்டாக கிழிவதால் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது.

புது திட்டம்: இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு புகைபடத்துடன் கூடிய "ஸ்மார்ட் கார்டு' பஸ் பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களின் புகைப்படம் எடுத்து "ஸ்மார்ட் கார்டு' பாஸ் வழங்க உள்ளனர்.

தற்போது மாணவர்கள் சேர்க்கை நடப்பதால், அதன்பின் "ஸ்மார்ட் கார்டு' பஸ் பாஸ் தரப்படும் என போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நன்றி:



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்