அரசுப் பணிகளில் பதவி உயர்வின் போது, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சதவீத ஒதுக்கீடு கோரிய மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
தென் ஆற்காடு, வள்ளலார் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத் தலைவர் சண்முகம், செயலர் துரைசாமி ஆகியோர், தாக்கல் செய்த மனுவில், "பதவி உயர்வில், மாற்றுத் திறனாளிகளுக்கு, மூன்று சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும். குறிப்பிட்ட ஆண்டில், தகுதி வாய்ந்த ஊழியர் கிடைக்கவில்லை என்றால், அடுத்த மூன்றாண்டுகளுக்கு, அந்த காலியிடங்களை கொண்டு செல்ல வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதி சந்துரு விசாரித்தார். அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் திக் விஜய் பாண்டியன் ஆஜரானார்.
மனுவை விசாரித்த, நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு:
அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்த பதிலில், "அரசுப் பணிகளில், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகிறது. பதவி உயர்வில் மூன்று சதவீதங்களை ஒதுக்க வேண்டும் என, அரசின் கொள்கை எதுவும் இல்லை. சீனியாரிட்டி, இடமாற்றம் மூலம் பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு குறித்த கொள்கை, தற்போது அரசிடம் இல்லை. தகுந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் சம வாய்ப்பு, உரிமைகள் பாதுகாப்பு சட்டப்படி, பணிகளை அடையாளம் கண்ட பின் தான், இடஒதுக்கீடு அளிக்கப்படும். முதலில் நியமிப்பதற்கு தான் இந்த இடஒதுக்கீடே தவிர, பதவி உயர்வுக்கு இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.
நன்றி:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக