ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஜாதிச் சான்றிதழ் எப்போது கிடைக்கும் என்கிற தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சட்டப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகளைச் செயல்படுத்தும் வகையிலான உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் வெளியிட்டு வருகின்றன. அந்த அறிவிப்புகளில் முக்கியமான அறிவிப்பாக கருதப்படுவது, "ஆறாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் (மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி. உள்பட) பள்ளியிலேயே ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் வருமானச் சான்றிதழ் வழங்கப்படும்' என்பது தான்.
எப்போது கிடைக்கும்?
முதல்வரின் அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் அதற்கான உத்தரவை வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா வெளியிட்டுள்ளார்.
அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
.

- ஒரு சாதாரண தாளிலோ அல்லது ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்தையோ மாணவர்களிடம் அளித்து அதை நிரப்பித் தரும்படி, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.
- விண்ணப்பங்களுடன் உரிய ஆதாரங்களை இணைத்து வட்டாட்சியர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்தப் பணிகளை ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்குள் முடிப்பது அவசியம்.
- சான்றிதழ்களை வழங்குவதற்கான உரிய ஆய்வுகளை வருவாய்த் துறை அதிகாரிகளும், அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும்.
- செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்குள் இந்தப் பணிகளை வருவாய்த் துறை முடிக்க வேண்டும்.
- பணிகள் முடிக்கப்பட்டதும் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் டிசம்பர் மாதத்துக்குள்ளாக அளிக்க வேண்டும்.
- வட்டாட்சியர்கள் அளித்த சான்றிதழ்களை அடுத்த ஆண்டு (2013) ஜனவரி மாதத்துக்குள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக