தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

12.6.12

விலையில்லா நோட்டுகள் வழங்குவதில் தாமதம்: பெற்றோர்கள் கவலை

நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகள் துவங்கி 12 நாட்களை கடந்த நிலையில் அரசு அறிவித்த விலையில்லா நோட்டுகள் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. பாடங்கள் நடத்தப்படுவதால் நோட்டுகளை கடைகளில் வாங்கி வரும்படி பள்ளிகளில் வற்புறுத்துவது பெற்றோர்களை கவலையடைய செய்துள்ளது.

இந்தாண்டு
  • விலையில்லா புத்தகங்கள் (1 முதல் பிளஸ் 2 வரை), 
  • நோட்டுகள் (1 முதல் 10ம் வகுப்பு வரை), 
  • புத்தகப் பை (1 முதல் பிளஸ் 2 வரை), 
  • சீருடை (1முதல் 8ம் வகுப்பு வரை), 
  • கலர் பென்சில் (1முதல் 5ம் வகுப்பு வரை) 
என 13 வகையான விலையில்லா பொருள்கள் வழங்கப்படும் என, அரசு அறிவித்தது.

பள்ளி துவங்கிய நாளில் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கப்பட்டன. பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படும் நிலையில் அவற்றை எழுத நோட்டுகள் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால், மாணவர்கள் எழுத நோட்டுகள் தேவை என்பதால் பள்ளிகளில், கடைகளில் விலைக்கு வாங்கி வரும்படி பெற்றோர்களை வலியுறுத்துகின்றனர்.

மதுரை மாவட்டம், சேடபட்டியை சேர்ந்த மாணவியின் தந்தை முருகன் கூறியதாவது:
எனக்கு பள்ளிகளில் படிக்கும் 3 பெண்கள் உள்ளனர். அரசு அறிவித்த விலையில்லா புத்தகம் உதவியாக இருந்தது. தற்போது நோட்டுகளை விலைகொடுத்து வாங்கி வர சொல்கின்றனர். ஒருவருக்கு ஒரு ஜோடி நோட்டுகள் வாங்க குறைந்தது ரூ.200 வரை செலவாகிறது. என்னை போன்ற பெற்றோர்களுக்கு சுமையாக உள்ளது. அரசு அறிவித்த விலையில்லா நோட்டுகள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க
வேண்டும், என்றார்.

மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், ""அரசு அறிவித்த விலையில்லா பொருள்கள் வழங்கும் திட்டங்கள் மாணவர்களுக்கு ஒவ்வொன்றாக வழங்கப்படும். புத்தகங்கள் கொடுத்து முடித்தவுடன் நோட்டுகள் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அரசின் விலையில்லா பொருட்கள் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும்,'' என்றார்.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்