குற்ற வழக்கை திரும்ப பெற்ற பத்தாண்டுகளுக்கு பின் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது சரியல்ல என குறிப்பிட்ட மதுரை ஐகோர்ட் கிளை, விவசாய இணை இயக்குனரை தற்காலிக பணிநீக்கம் செய்ததை ரத்து செய்தது.
சிவகங்கையை சேர்ந்த சண்முக சுந்தரம் தாக்கல் செய்த ரிட் மனு:
விவசாய துறையில் இணை இயக்குனராக பணிபுரிந்தேன். 2009 ஜன., 31ல் ஓய்வு பெற வேண்டும். ஓய்வு பெற அனுமதி மறுத்த அதிகாரிகள், தற்காலிக பணி நீக்கம் செய்தனர். விசாரித்த போது 2001ல் மதுரையில் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது, கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கு சான்றிதழ் வழங்குகையில் கவனக்குறைவாக செயல்பட்டதால் வழக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 2009ல் அரசுக்கு பண இழப்பு இல்லை என வழக்கு திரும்ப பெறப்பட்டது. அதை கவனத்தில் கொள்ளாமல், என்னை தற்காலிக பணி நீக்கம் செய்து, பத்தாண்டுகளுக்கு பின் சார்ஜ் மெமோ கொடுக்கப்பட்டது. அதை ரத்து செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் சார்பில் வக்கீல் விஸ்வலிங்கம் ஆஜரானார்.
நீதிபதி எஸ்.மணிக்குமார், "குற்ற வழக்கை திரும்ப பெற்று கொண்ட பின் பத்தாண்டுகளுக்கு பின் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது சரியல்ல. மனுதாரர் தற்காலிக பணி நீக்கம், சார்ஜ் மெமோ ரத்து செய்யப்படுகிறது. அவரை ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும்,'' என விவசாய துறையினருக்கு உத்தரவிட்டார்.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக