தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

27.7.11

சமச்சீர் கல்வித் திட்ட வழக்கு-சுப்ரீம் கோர்ட்டில் 2ம் நாள் விசாரணை தொடங்கியது

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அப்பீல் மனு மீதான 2ம் நாள் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.

சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகியது தமிழக அரசு. உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் சமச்சீர் கல்வித் திட்ட பாடப் புத்தகங்களை விநியோகிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் இறுதி விசாரணை நேற்று தொடங்கியது. காலை முதல் மாலை வரை நடந்த விவாதத்தின்போது சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை. புத்தகங்கள் தரமானதாக இல்லை. எனவே இந்த ஆண்டு இத்திட்டத்தை அமல்படுத்துவது இயலாத காரியம் என தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும் அடுத்த ஆண்டு அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் தமிழக அரசுத் தரப்பு வாதம் தொடங்கிநடந்து வருகிறது. இது முடிந்தவுடன் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சார்பில் மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான அபிஷேக் சிங்வி வாதிடவுள்ளார். அதன் பின்னர் பெற்றோர், மாணவர்கள் சார்பில் வக்கீல்கள் வாதிடவுள்ளனர்.


நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்