பள்ளிகளை இன்று (ஜூலை 29) ஆசிரியர்களும், மாணவர்களும் புறக்கணிக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
சமச்சீர் கல்வி தொடர்பாக மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோரும் இன்று ஒரு நாள் பள்ளிகளை புறக்கணிக்க வேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் தி.மு.க.,வின் அழைப்புக்கு யாரும் ஆதரவு தெரிவித்துவிடக் கூடாது என்பதில் அரசும் உறுதியாக உள்ளது.
இதனால் நேற்று டெலிபோன் உத்தரவாக அதிகாரிகள் பள்ளிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளனர். அதன்படி, இன்று பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்களும், மாணவர்களும் எக்காரணம் கொண்டு வராமல் இருக்கக் கூடாது. பள்ளிக்கு வந்தபின்பு வெளியே செல்வதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். யாரும் அவசிய காரணங்களை தவிர்த்து அனுமதி, விடுப்பு எடுக்கக் கூடாது,' என உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
பள்ளிக் கல்வித் துறையை பொறுத்தவரை சமச்சீர் கல்விக்கு ஆதரவு கருத்துடைய ஆசிரியர், மாணவர்கள் இருந்தால்கூட தற்போதைய நிலையில் யாரும் வெளிப்படுத்த தயாராக இல்லை. அதேசமயம் துவக்கக் கல்வியில் ஒரு சில ஆசிரியர் கட்டணியினர் ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது. தனியார் (மெட்ரிக்) பள்ளிகள் சமச்சீர் கல்விக்கு எதிரான நிலையில் இருப்பதால் அங்கு இப்பிரச்னை எழவில்லை.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக