தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

19.7.11

சமச்சீர் கல்வி – தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை

  தமிழகத்தில் மாநில பாடத்திட்டம், ஆங்கிலோ இந்தியன் பாடத் திட்டம், மெட்ரிக் பாடத்திட்டம், ஓரியன்டல் பாடத்திட்டம் என நான்கு வகையான பாடத்திட்டம் அமலில் இருந்தன.  இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே மாதிரியான பாடத்திட்டத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்திட தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு உயர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்,  மூட்டா அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம், உள்ளிட்ட ஆசிரியர் சங்கங்களும் கல்வியாளர்களும் சமூக சிந்தனையாளர்களும் கடந்த பல ஆண்டுகளாக நடத்திய கருத்தரங்குகள், மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள் இவற்றின் காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு சமச்சீர் கல்வியை தமிழக அரசு மேற்சொன்ன நான்கு பாடத்திட்டங்களை ஒருங்கிணைத்து பொது பாடத்திட்டத்தில் 1மற்றும் 6-ம் வகுப்பிற்கு அமல்படுத்தியது.  இக்கல்வியாண்டில் 2 முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி நடைமுறையில் வர இருந்தது.  சமச்சீர் பாடத்திட்டம் தரமானதாக இல்லையென அரசு திட்டத்தை தற்காலிகமா ஒத்திவைத்தது.  இது தொடர்பாக வழக்குகள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றிற்கு சென்று இன்று (18.07.2011) சென்னை உயர்நீதிமன்றம் சமச்சீர் கல்வியை இந்தாண்டே அமல்படுத்திட உத்தரவிட்டுள்ளது.

                    பல அமைப்புகள் போராடி பெற்ற சமச்சீர் கல்வியினை அரசு காலம் தாழ்த்தாமல் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக அமல்படுத்திட கேட்டுக்கொள்கின்றோம்.  தமிழக அரசு சமச்சீர் கல்வியில் குறைபாடு இருக்கு என கருதினால் அரசு அமைத்துள்ள குழுவை பயன்படுத்தி அதில் மேலும் ஆசிரியர்களையும் கல்வியாளர்களையும் இணைத்து குறைகளை நிவர்த்தி செய்து அந்த பாடத்திட்டத்தினை அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தலாம்.  மிகுந்த உழைப்புடன் கடந்த ஓராண்டுகளாக தயாரிக்கப்பட்ட சமச்சீர் பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புத்தகங்களின் அடிப்படையில் உடனடியாக சமச்சீர் கல்வியை அமல்படுத்திட தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் தமிழக மாணவர்களின் சார்பாக வேண்டிக் கேட்டுக்கொள்கின்றோம்.

இவண்
க. இசக்கியப்பன், 

மாநில அமைப்புச் செயலாளர்.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்