தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

26.7.11

சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த முடியாது; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு 'பிடி' வாதம்

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த முடியாது என்றும் , இது தொடர்பாக இன்னொரு குழு அமைத்து முழு விவர அறிக்கை வந்தவுடன் மாற்றம் செய்து வரும் 2012 ல் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த முயற்சிப்போம் என்றும் தமிழக அரசு சார்பி்ல் சுப்ரீம் கோர்ட்டில் வாதிடப்பட்டது. நாளையும் விசாரணை தொடர்ந்து நடக்கிறது. பெற்றோர் சார்பிலும், பொதுநலம் விரும்புவோர் சார்பிலும் வாதிடுகின்றனர். இது தொடர்பான தீர்ப்பு இன்னும் மூன்று அல்லது 4 நாட்கள் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு எந்தப்பாடம் என்பதில் தொடர் குழப்பம் நீடிக்கிறது.
 

கடந்த கால தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களில் பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க., அரசு ரத்து செய்தது . சிலவற்றை புதிய அரசு மாற்றம் செய்தது.

இந்நிலையில் சமச்சீர்கல்வி திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி , சென்னை ஐகோர்ட் விரைந்து விசாரித்து சமச்சீர் கல்வியையே நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. தமிழக அரசின் சட்டத்திருத்தமும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு கேட்டபடி சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை விதிக்க கடந்த வாரம் மறுத்து விட்டனர். வரும் 2 ம் தேதிக்குள் மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி திட்டத்திற்கான புத்தகங்கள் வழங்கிடவும் ஆணை பிறப்பித்தனர் . இந்த ( செவ்வாய்க்கிழமை) விசாரணை இன்று இறுதி பைசலுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.பி..,ராவ் தனது வாதுரையில்,  "சமச்சீர் கல்வி தரமற்று இருப்பதால் அமல்படுத்துவது சாத்தியமற்றது. இதனால் மாணவர்கள் மன அழுத்த்திற்கு ஆளாவர். அத்துடன் மேல்நிலைத்தேர்வுக்கு தகுதி உடையவர்களாக்க முடியாது. இது தொடர்பாக குழு அமைத்து விவாதிக்கப்பட்டு பின்னர் அடுத்த ஆண்டில் செயல்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும். மேலும் இந்த பாடத்தில் ஒரு குறிப்பிட்ட நபர் தொடர்பான துதி பாடல்கள் உள்ளன. குறைகள் களைந்து பின்னர் நடைமுறைப்படுத்த ஓரு ஆண்டு காலமாவது தேவைப்படும்" என்றார்.

பெற்றோர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி பாடப்புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. ஏற்கனவே பல கோடி ரூபாய் செலவில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் வீணாக கிடக்கிறது. இன்னும் காலம் தாமதிக்காமல் பள்ளிகளை துவக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. நாளையும், நாளை மறுநாளும் விசாரணை தொடர்ந்து நடக்கவுள்ளது. இதனால் இதில் இறுதி தீர்ப்புக்கு இன்னும் மூன்று அல்லது 4 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றும் தெரிகிறது.

தி.மு.க., போராட்டத்திற்கு அழைப்பு : இதற்கிடையில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்டாமல் காலம் தாமதிப்பதை கண்டித்து வரும் 29 ம் தேதி மாணவ, மாணவிகள் பள்ளியை புறக்கணிக்க வேண்டும் என போராட்டத்திற்கு தி.மு.க., அழைப்பு விடுத்துள்ளது.

 நன்றி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்