இது குறித்து, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
இம்மாதம் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை, யோகாசன கல்வி முகாம்களையும், 19ம் தேதி மருத்துவ பரிசோதனை முகாம்களையும், 27ம் தேதி பிசியோதெரபி முகாம்களையும் பள்ளிகளில் நடத்த தேவையான நடவடிக்கைகளை, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் எடுத்திட வேண்டும். யோகாசன வகுப்புகளை தினமும் ஒரு மணி நேரம், ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நடத்த வேண்டும்.
அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 19ம் தேதி மருத்துவ பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும். பள்ளி அமைந்துள்ள இடங்களுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்களை வரவழைத்து, மருத்துவ பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும். இது தொடர்பாக, மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனரை, முதன்மைக் கல்வி அதிகாரிகள் சந்தித்து, தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
மருத்துவ முகாமில், பிசியோதெரபி தேவைப்படும் மாணவர்களை அடையாளம் கண்டு, பின்னர் கல்வி மாவட்ட அளவில் நடக்கும் முகாம்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று, உரிய பிசியோதெரபி சிகிச்சையை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இறுதியாக, முகாம்கள் குறித்த அறிக்கையை, பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக