மேலவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெற 96 ஆயிரம் ஆசிரியர்களும் 4.82 லட்சம் பட்டதாரிகளும், விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் மேலவை தேர்தலுக்கான பட்டதாரிகள் தொகுதிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் அளிக்க கால அவகாசம் டிசம்பர் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை, விண்ணப்பித்தவர்களது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இறுதி வாக்காளர் பட்டியல் இம்மாதம் 29ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில், மேலவை தேர்தல் வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பிக்க கடந்த 5ம் தேதி தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. இதன்படி, கடந்த 5ம் தேதி வரை ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 88 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். ஏற்கனவே, அளிக்கப்பட்ட அவகாசத்தின் போது விண்ணப்பித்த மூன்று லட்சத்து 13 ஆயிரத்து 662 பட்டதாரிளுடன் சேர்த்து, மொத்தம் நான்கு லட்சத்து 82 ஆயிரத்து 750 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடைசி நாளான நேற்று விண்ணப்பித்தவர்களையும் சேர்த்தால், ஐந்து லட்சம் பட்டதாரிகள் தான் பட்டியலில் இடம் பெறுவர்.
இதுதவிர, ஆசிரியர் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெற, தற்போது 25 ஆயிரத்து 850 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஏற்கனவே விண்ணப்பித்த 70 ஆயிரத்து 923 ஆசிரியர்களையும் சேர்த்து, 96 ஆயிரத்து 773 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடைசி நாளான நேற்று விண்ணப்பித்தவர்களையும் சேர்த்தால், மொத்தமே ஒரு லட்சம் ஆசிரியர்கள் தான் பட்டியலில் இடம் பெறுவர்.
சிறப்பு முகாம் நடத்தப்பட்ட 5ம் தேதியன்று, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் அதிகளவு பட்டதாரிகளும், ஆசிரியர்களும் விண்ணப்பிக்கவில்லை.
இதுவரை, சென்னை பட்டதாரி தொகுதிக்கு 22 ஆயிரத்து 537 பேரும், ஆசிரியர் தொகுதிக்கு 2,873 பேரும், தமிழ்நாடு வடக்கு பட்டதாரி தொகுதிக்கு 17 ஆயிரத்து 15 பேரும், 2,590 ஆசிரியர்களும், தமிழ்நாடு வடமத்திய தொகுதிக்கு 29 ஆயிரத்து 726 பட்டதாரிகளும், 4,019 ஆசிரியர்களும் விண்ணப்பித்துள்ளனர். மேற்கு தமிழ்நாடு தொகுதிக்கு, 23 ஆயிரத்து 38 பட்டதாரிகளும், 6,686 ஆசிரியர்களும், கிழக்கு மத்திய தொகுதிக்கு 28 ஆயிரத்து 873 பட்டதாரிகளும், 3,677 ஆசிரியர்களும், தென்மத்திய தொகுதிக்கு 23 ஆயிரத்து 694 பட்டதாரிகளும், 2,650 ஆசிரியர்களும், தெற்கு தொகுதிக்கு 24 ஆயிரத்து 205 பட்டதாரிகளும், 3,355 ஆசிரியர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
மேலவை தேர்தலுக்கு மாவட்டங்களில் பயிற்சி:
ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆறு அதிகாரிகளுக்கு, ஆந்திராவில் மேலவை தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய பிரம்மம், கடந்த 2ம் தேதி முதல் பயிற்சி அளிக்கிறார். இந்த ஆறு பேரும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள மற்ற ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பர். இதுதவிர, ஓட்டு எண்ணிக்கைக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக