தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

3.12.10

சென்சஸ்-2011 முதல்கட்ட பணி உழைப்பூதியத்திற்கு ரூ. 62 கோடி : ஒரு வாரத்திற்குள் பட்டு வாடா

தமிழகத்தில் முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில்(சென்சஸ்-2011) ஈடுபட்ட பணியாளர்களுக்கு உழைப்பூதியமாக ரூ. 62 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 

கடந்த ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை சென்சஸ் பணி நடந்தது. கணக்கெடுப்பாளர், மேற்பார்வையாளர், தலைமை பயிற்சியாளர். பொறுப்பு அலுவலர் என்ற 4 வகையில் அரசு ஊழியர்கள் இப்பணி மேற்கொண்டனர். வீட்டு பட்டியல் தயாரிப்பு, தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பு, பயிற்சி வகுப்பில் பங்கேற்பு என்ற அடிப்படையில் உழைப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கணக்கெடுப்பாளர், மேற்பார்வையாளர்களுக்கு தலா ரூ. 4,450ம், பயிற்சியாளர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 50ம், பொறுப்பு அலுவலர்களுக்கு ரூ. 4 ஆயிரமும் உழைப்பூதியம் தர அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் சென்சஸ் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு உழைப்பூதியம் தருவதற்காக ரூ. 62.23 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. இத்தொகை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வழியாக தாசில்தார்/கமிஷனர்கள் மூலம் ஒருவாரத்திற்குள் பட்டுவாடா செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

நன்றி: 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்