தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

3.12.10

மேலவை: வாக்காளர் பட்டியல்களில் பெயர் சேர்த்தல்/நீக்கல் 5-12-2010 (ஞாயிறு) சிறப்பு முகாம்கள்

தமிழக சட்ட மேலவைத் தேர்தலுக்கான ஆசிரியர் மற்றும் பட்டதாரி தொகுதிகளின் வாக்காளர் பட்டியல்களில் பெயர் சேர்க்க வரும் 7-ம் தேதி கடைசி நாளாகும். 

இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கை:

தமிழ்நாடு சட்ட மேலவையின் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தொகுதிகளின் வாக்காளர் பட்டியல்களில் பெயர் சேர்த்தல்/நீக்கல் முதலியவற்றுக்கான மனுக்களை அளிக்க இம்மாதம் 7-ம் தேதி கடைசி நாளாகும். இத்தொகுதிகளில் வாக்காளர்கள் மனுக்களை அளிக்க வசதியாக 5-12-2010 (ஞாயிற்றுக்கிழமை) அன்று எல்லா நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அன்று நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். அங்கே படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம். பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தொகுதிகளின் வாக்காளர் பட்டியல்களில் பெயர் சேர்க்கப்பட தகுதியுள்ள நபர்கள்முறையே படிவம் 18 மற்றும் படிவம் 19 ஆகியவற்றில் தனித்தனியே விண்ணப்பிக்கவேண்டும். 

பட்டதாரிகளின் சான்றிதழ்களைச் சான்றொப்பமிட கீழ்க்கண்ட அலுவலர்கள் கூடுதல் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
  • அரசுக் கல்லூரிகளின் முதல்வர்கள் 
  • வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 
  • நகராட்சி ஆணையர்கள்
  • நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களாக நியமிக்கப்படாத வட்டாட்சியர்கள் 
  • அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் 
  • மாநகராட்சிகளிலுள்ள உதவி செயற்பொறியாளர்கள்.
படிவம் 18-இல் விண்ணப்பிக்கும் ஒரு விண்ணப்பதாரர், அத்துடன் சுய சான்றொப்பமிட்டு மேலும் கூடுதல் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர் ஒருவரால் சான்றொப்பமிடப்பட்ட பட்டச் சான்றிதழின் நகலை இணைத்து வாக்காளர் பதிவு அதிகாரி / உதவி வாக்காளர் பதிவு அதிகாரி / நிர்ணயிக்கப்பட்ட அலுவலரிடம் தபாலிலோ நேரடியாகவோ சமர்ப்பிக்கலாம். அப்படிச் சமர்ப்பிக்கும்போது நிர்ணயிக்கப்பட்ட அலுவலரிடம் அசல் சான்றிதழ்களை காட்டத் தேவையில்லை. வாக்காளர்களின் வசதிக்காக இந்த வசதி கூடுதலாகச் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அலுவலரிடம் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து சரிபார்ப்புக்காக அசல் சான்றிதழைக் காட்டும் நடைமுறையும் தொடர்கின்றது.

நன்றி: 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்