தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

2.12.10

கட்டாயக்கல்வி தொடர்பாக கருத்து தெரிவிக்க அழைப்பு

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டம் குறித்து, பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் கீழ், வரைவு விதிகள் தயார் செய்யப்பட்டு, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோரின் பார்வைக்காக, www.pallikalvi.in, www.tn.gov.in/schooleducation ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

ஆர்வம் உள்ளவர்கள், தங்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை, டிசம்பர் 20ம் தேதிக்குள், "இணை இயக்குனர் (மேல்நிலைக் கல்வி), பள்ளிக்கல்வி இயக்ககம், சென்னை-6' என்ற முகவரிக்கு அஞ்சலிலோ அல்லது jdhssed@nic.in என்ற இ-மெயில் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்