தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

7.12.10

பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை எதிரொலி : அரையாண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல்

மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட, 11 மாவட்டங்களில் அடிக்கடி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருவதால், அரையாண்டுத் தேர்வுகளை குறித்த தேதியில் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
தமிழகம் முழுவதும் வட கிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருவதால், இம்மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, இம்மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, மாவட்ட நிர்வாகங்கள் அடிக்கடி விடுமுறை அறிவித்து வருகின்றன. கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக விடுமுறை விடப்பட்டன. நேற்றும் 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இப்படி, பள்ளிகளுக்கு அடிக்கடி விடுமுறை விடப்பட்டு வருவதால், பள்ளிகளில் நடக்கும் அரையாண்டுத் தேர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன.


தனியார் பள்ளிகளில், கடந்த மாத இறுதியில் இருந்தும், இம்மாத துவக்கத்தில் இருந்தும் இரண்டு கட்டங்களாக அரையாண்டுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. மழையால் விடுமுறை விடப்பட்டால், அன்று நடக்கும் தேர்வுகள், சனிக்கிழமைக்கு தள்ளி வைக்கப்படுகின்றன. இதேபோல், பல தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு, நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகளில், 20ம் தேதிக்குள் அனைத்து தேர்வுகளையும் முடிக்கும் வகையில், அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், விடுமுறை காரணமாக, மேலும் ஒரு வாரம் தேர்வுகள் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும், தேர்வுப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் பொதுத்தேர்வாக, அரையாண்டுத் தேர்வுகள் நடக்கின்றன. சென்னை மாவட்டத்தில், வரும் 13ம் தேதி முதல் தேர்வுகள் துவங்குகின்றன. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை மறுநாள் முதல் தேர்வுகள் நடக்கின்றன. சென்னையில் தொடர்ந்து மழை பெய்தால், 9ம் தேதி முதல் நடக்க வேண்டிய தேர்வுகளில் பாதிப்பு ஏற்படும்.

நன்றி: 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்