தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

8.8.11

சமச்சீர் கல்வி வழக்கு - நாளை தீர்ப்பு; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த ஜெ., உறுதி

சமச்சீர் கல்வி வழக்கின் இறுதி தீர்ப்பு நாளை வெளியாக உள்ளது.

கடந்த 2 வாரகாலமாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை, வியாழக்கிழமை அன்று முடிவுற்றது. அதனைத் தொடர்ந்து நாளை இறுதித்தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. நீதிபதி பன்சால் தலைமையிலான நீதிபதிகள் குழு தீர்ப்பை வழங்க உள்ளது.

10.30 மணிக்கு தீர்ப்பு : நீதிபதி பன்சால் தலைமையிலான நீதிபதிகள் குழு, காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தீர்ப்பு அமல் : சமச்சீர் கல்வி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்ததும் சமச்சீர் கல்வி குறித்த தீர்ப்பு அமல்படுத்தப்படும் என சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் விவாதத்தின் போது இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., குணசேகரன், சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா, சமச்சீர் கல்வி தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது; எப்படிபட்ட தீர்ப்பாக இருப்பினும் தீர்ப்பு இன்றே வருமானால், தமிழக அரசு உடனடியாக அதனை அமல்படுத்தும் என உறுதியளித்துள்ளார்.

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்