தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

12.10.10

ஆசிரிய சங்க நிர்வாகிகளுடன் கல்வித்துறை செயலர் ஜோதிஜெகராஜன் பேச்சுவார்த்தை

தொடக்க நிலை முதல் மேல் நிலைப் பள்ளி வரையிலான அனைத்து ஆசிரிய சங்க நிர்வாகிகளுடன்  கல்வித்துறை செயலர் ஜோதிஜெகராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார்.  

தமிழகத்தில் ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊதிய குழுவில் பல்வேறு முரண்பாடுகள் நிலவுகிறது.  மத்திய அரசுக்கு இணையான சம்பளம் ஆசிரியர்களுக்கு தரப்படவில்லைஇதையடுத்து அமைக்கப்பட்ட ஒருநபர் குழுவும், சம்பள வேறுபாடுகளை களையவில்லை என்பதால் பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் அதிருப்தி அடைந்துள்ளன.

இதற்கிடையில் ஒரு நபர் கமிஷன் பரிந்துரை குளறுபடிகளை கண்டித்து டிட்டோஜாக் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தப்பட்டது. அடுத்த கட்டமாக மாநில அளவில் சென்னையில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதுகலை ஆசிரிய சங்கங்கள் இணைந்து "ஜாக்' சார்பிலும் பல்வேறு கட்ட போராட்டங்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இடைநிலை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலம் தழுவிய போராட்டத்தை, ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பும் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது.

இதையொட்டி, ஆசிரியர் இயக்கங்களை அழைத்து  கல்வித்துறை செயலர் ஜோதிஜெகராஜன்  பேச்சுவார்த்தை நடத்தினார். "ஆசிரியர்களின் சம்பள வேறுபாட்டையும் எதிர்பார்ப்பையும்,  அரசு அறிந்துள்ளது. சம்பள முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்