தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

9.10.10

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில்  8ம் தேதி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 
  • அரசு, அரசு உதவி பெறும் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உட்படுத்த வேண்டும்.
  • இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள மேம்படுத்தப்பட்டுள்ள ஊதிய விகிதமான (பே பாண்ட் 2) 9,300-34,800 கிரேடு பே 4,200 ரூபாய் சாதாரண நிலைக்கும், 9,300-34,800 கிரேடு பே 4,600 ரூபாய் தேர்வு நிலைக்கும், 9,300-34,800 கிரேடு பே 4,800 ரூபாய் சிறப்பு நிலைக்கு வழங்க வேண்டும். 
  • மகப்பேறு விடுப்பு 6 மாதங்கள் வழங்க வேண்டும். 
  • பதவி உயர்வுக்கு 5 சதவீதம் வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னையில் 8ம் தேதி காயிதே மில்லத் மணி மண்டபம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

மாநில தலைவர் குமார் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் இசக்கியப்பன், மாநில துணை பொது செயலாளர் இதயராஜா முன்னிலை வகித்தனர். மாநில தலைமையிட செயலாளர் சோமசேகர் அனைவரையும் வரவேற்றார். மாநில பொது செயலாளர் குமரேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். உண்ணாவிரதத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவி தமிழ்செல்வி தொடங்கி வைத்தார். அகில இந்திய எஸ்.டி.எப்.ஐ பொது செயலாளர் ராஜேந்திரன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாநில பொருளாளர் உதயசூரியன் நன்றி கூறினார்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்