தமிழக சட்ட மேலவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் தகுதி உடைய பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மேல்சபை தேர்தலுக்கு பட்டதாரி தொகுதிகள், ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க 1960-ம் ஆண்டின் வாக்காளர் பதிவு விதிகளின்படி, தகுதியுள்ள ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும்.
1.11.2010-ஐ தகுதி நாளாகக் கொண்டு பட்டதாரி தொகுதிக்கு படிவம்-18-ஐ, ஆசிரியர் தொகுதிக்கு படிவம் 19-ஐ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியிடம் அளிக்கலாம். மாநகராட்சி பகுதிகளில் மண்டல உதவி ஆணையாளர்களும், இதர பகுதிகளில் தாலுகா அலுவலகங்களில் தாசில்தார் மற்றும் துணை தாசில்தார்களும் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்வார்கள்.
தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக இணையதளத்திலும் விண்ணப்பங்களை டவுண்லோடு செய்து பயன்படுத்தலாம். வாக்காளர்களுக்கான தகுதிகள், தொகுதி பட்டியல் ஆகிய விவரங்களையும் இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பெயர் சேர்க்கக் கோரி கோரி நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ மொத்தமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
பட்டதாரி தொகுதிகளைப் பொறுத்தவரையில், ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர் இதர உறுப்பினர்களுக்கும் சேர்த்து விண்ணப்பம் கொடுக்கலாம். இதற்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களின் அசல் கல்விச் சான்றிதழ் ஆவணங்களை காண்பிக்க வேண்டும்.
ஆசிரியர் தொகுதியைப் பொறுத்தமட்டில், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் தலைவர் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சேர்த்து உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பம் கொடுக்கலாம். பட்டதாரி, ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர் பெயர் சேர்ப்புக்கு அக்டோபர் 1-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற கடைசி நாள் நவம்பர் 6-ந் தேதி ஆகும். வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 22-ந் தேதி வெளியிடப்படும். வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு கடைசி நாள் டிசம்பர் 7-ந் தேதி ஆகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை டவுண்லோடு செய்க.
. .
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
உலகளவில் குறிப்பிடத்தக்க நூலகங்களுள் ஒன்றாக திகழ்கிறது, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள நூலகம். இங்கு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத...
-
Student DCF
-
"ஏற்கனவே திருமணமான மத்திய அரசு ஊழியர், மற்றொரு பெண்ணை மணந்து, அதன் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும், ஓய்வூதியம் மற்றும் பணப் பலன்கள் வழங்...
-
அசோகச் சக்கரவர்த்தியோ அல்லது அக்பர் சக்கரவர்த்தியோகூட இந்தியா முழுமையும் செங்கோல் செலுத்தியதில்லை. ஆனால், காந்தியடிகளின் தலைமையில் நடைபெற்ற...
-
நாகர்கோவிலில் சிஇஓ, டிஇஓவை கண்டித்து அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, புதிய விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 முதல், பட்டப் படிப்பு வரையில் பெற...
-
தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டில், பாட புத்தகங்களை "சிடி' வடிவில் கொண்டு வருவதற்கான, முயற்சியில், கல்வி துறையினர் இறங்கியுள்ளனர். ...
-
தண்ணீரில் உற்பத்தியாகும் எரிபொருளை பயன்படுத்தி, மேட்டூர் மால்கோ பள்ளி மாணவர், பைக்கை ஓட வைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மேட்டூர், த...
-
"காப்பீடு, ஓய்வூதியத் திட்டத்தில் அன்னிய முதலீட்டை அதிகரிப்பது, மக்களை ஏமாற்றும் நடவடிக்கை' என்று, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழு...
-
கற்பித்தலுக்கான உபகரணங்கள் வாங்குவது என்ற பெயரில், தமிழகத்தின், அனைவருக்கும் கல்வி திட்ட பள்ளிகளின் வளர்ச்சி நிதியை, கர்நாடகாவிற்கு தாரை வ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக