தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

28.3.12

நடுரோட்டில் ஆசிரியர் தம்பதியை தாக்கிய தர்மபுரி டிஎஸ்பி-பொய் வழக்கு மிரட்டல் வேறு!

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பம் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக கூறி, தர்மபுரியில் ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பட்டதாரி ஆசிரியரை நடுரோட்டில் டிஎஸ்பி கன்னத்தில் அறைந்தார். அதைத் தடுக்க வந்த அவரது மனைவியையும் பிடித்து கீழே தள்ளிவிட்டார்.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பம் தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் வாங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆண், பெண் பட்டதாரிகள் அதிகாலை முதலே வந்திருந்தனர். இதனால் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் விண்ணப்பங்கள் விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சிலர் விண்ணப்பங்களை கூடுதல் விலைக்கு வெளியே விற்பது தெரியவந்தது.

இதையடுத்து விண்ணப்பம் வாங்க வந்து காத்திருந்தவர்களுக்கும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எங்களுக்கு விண்ணப்பம் தர மறுக்கிறீர்கள், ஆனால் வெளியில் தாராளமாக கூடுதல் விலைக்கு விற்கிறார்களே என்று அவர்கள் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்கள் விண்ணப்பம் வழங்கும் மையத்தின் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த தர்மபுரி நகர டி.எஸ்.பி. சந்தானபாண்டியன், மறியலை கைவிட்டு கல்வி அலுவலகத்திற்கும் வருமாறு அவர்களை அழைத்தார். அதற்கு ஒரு ஆசிரியை வர முடியாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது டி.எஸ்.பி. சந்தானபாண்டியனுக்கும், அந்த ஆசிரியைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைடுத்து அந்த ஆசிரியையை போலீசார் பிடித்து தள்ளி அப்புறப்படுத்தினர்.

இதை அந்த ஆசிரியையுடன் வந்த அவரது கணவர் கண்டித்தார். அப்போது ஆத்திரமடைந்த டி.எஸ்.பி. சந்தானபாண்டியன் அந்த ஆசிரியரின் கன்னத்தில் அறைந்தார்.

இதற்கு அந்த ஆசிரியர் எதிர்ப்புத் தெரிவிக்கவே அவரை டி.எஸ்.பி. சந்தாபாண்டியன் மீண்டும் தாக்கினார். கணவரை மீட்க வந்த ஆசிரியையும் டி.எஸ்.பி. கழுத்தை பிடித்து கீழே தள்ளினார். ஆசிரியை தடுமாறி கீழே விழுந்தார்.

அப்படியும் விடாமல் அந்த ஆசிரியரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை குடிபோதையில் இருந்ததாக கூறி வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்ததாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் போலீசாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதையடுத்தே அவரை விடுவித்துள்ளனர். பட்டதாரி ஆசிரியரையும் அவரது மனைவியையும் தாக்கிவிட்டு, அவர் மீது பொய் வழக்கு போட நடவடிக்கை எடுத்து தாக்கப்பட்டவரையே மன்னிப்பும் வாங்க வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட எஸ்பி அமித்குமார் சிங் கூறுகையில், அது தொடர்பாக டி.எஸ்.பி. சந்தானபாண்டியனிடம் அறிக்கை கேட்டு இருக்கிறேன். தொடர்ந்து இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

நன்றி:
 

2 கருத்துகள்:

  1. இந்த மாதிரிலாம் எங்கயாச்சும் நடக்குமா? ஒரு பொறுக்கியை, திருடனை கைநீட்டி அடிப்பதே சட்டப்படி தப்பு. ஆனா இங்க இந்த போலீஸ் உடையில் இருக்கும் "####****" ஒரு ஆசிரியரை எப்படி அடிக்கிறது பாருங்க. ஆசிரியரின் மனைவியையும் வேறு எட்டி உதைத்திருக்கிறது இந்த போலீஸ் பிராணி. மனித உரிமை மயிரளவுக்கு கூட இல்லாத இந்த நாட்டுல தான் நாட்டுப்பற்று, வல்லரசுனு பேசிக்கொண்டு இருக்கிறார்கள் சில மக்கள்! முதலில் இந்த நாட்டில் மனிதனை மனிதனாக நடத்தச் சொல்லுங்கள் மக்களே. இதை எதிர்த்து குறைந்தபட்சம் ஒரு ஸ்டேடஸாவது போடுங்க! கொடுமை!

    பதிலளிநீக்கு
  2. இந்த மாதிரிலாம் எங்கயாச்சும் நடக்குமா? ஒரு பொறுக்கியை, திருடனை கைநீட்டி அடிப்பதே சட்டப்படி தப்பு. ஆனா இங்க இந்த போலீஸ் உடையில் இருக்கும் "####****" ஒரு ஆசிரியரை எப்படி அடிக்கிறது பாருங்க. ஆசிரியரின் மனைவியையும் வேறு எட்டி உதைத்திருக்கிறது இந்த போலீஸ் பிராணி. மனித உரிமை மயிரளவுக்கு கூட இல்லாத இந்த நாட்டுல தான் நாட்டுப்பற்று, வல்லரசுனு பேசிக்கொண்டு இருக்கிறார்கள் சில மக்கள்! முதலில் இந்த நாட்டில் மனிதனை மனிதனாக நடத்தச் சொல்லுங்கள் மக்களே. இதை எதிர்த்து குறைந்தபட்சம் ஒரு ஸ்டேடஸாவது போடுங்க! கொடுமை!

    பதிலளிநீக்கு


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்