2011ம் ஆண்டு முதல் வருமான வரி உச்சவரம்பு ரூ. 2 லட்சமாக உயரப் போகிறது. அதேசமயம், வருமான வரி விலக்குக்கான சேமிப்புகளின் அளவை குறைக்கலாம் என்று தெரிகிறது. நேரடி வரி விகிதம் தொடர்பாக அரசு கடந்த ஆண்டு ஒரு வரைவு மசோதாவை உருவாக்கியது. அதில் மாதச் சம்பளம் வாங்குவோருக்கும், வீட்டுக் கடன் பெற்றோருக்கும் எந்தவித பலனும் இல்லாத வகையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அதில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது ஆண்டுக்கு ரூ. 1.60 லட்சம் வரை சம்பளம் வாங்குவோருக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு மேல் ரூ. 5 லட்சம் வரை வாங்குவோருக்கு 10 சதவீத வரி விதிப்பு கடைப்பிடிக்கப்படுகிறது. 5 முதல் 8 லட்சம் வரை பெறுவோருக்கு 20 சதவீதமும், 8 லட்சத்திற்கு மேல் வாங்குவோருக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. இது தற்போது கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்படவுள்ளது.
ரூ.2 lakh - ரூ.5 lakh: 10%
ரூ.5 lakh - ரூ.10 lakh: 20%
ரூ.10 lakh: 30%
மூத்த குடிமகன்களுக்கு ரூ. 2.5 லட்சமாக உயரவுள்ளது. அதேபோல வீட்டுக் கடன்களுக்கான வட்டிக்கு அதாவது ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு உண்டு. அது தொடர்ந்து நீடிக்கும். முன்பு அரசு அறிவித்த வரைவு நேரடி வரி விகித வரைவு மசோதாவில் இதை நீக்குவதாக கூறியிருந்தது. ஆனால் பொதுமக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து தற்போது இது தொடரவுள்ளது. இதுதொடர்பான நேரடி வரி விதிப்பு மசோதாவுக்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. திங்கள்கிழமை இது ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், நிறுவனங்கள் மீதான வரி விதிப்பு 30 சதவீதமாக தொடர்ந்து நீடிக்கும். புதிய வரி விகிப்பு விகிதங்கள் 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும். ஒட்டுமொத்த வரி விதிப்பு விகிதங்களையும் எளிமையாக்குவதும், சலுகைகளை கட்டுப்படுத்துவதுமே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம். புதிய வரி விகிதத் திருத்தத்தில், ஜிபிஎப், பிபிஎப், ஆர்பிஎப் ஆகியவற்றின் மீதான சலுகைகள் தொடர்ந்து நீடிக்கும். அதில் மாற்றம் இல்லை என்றார்.

.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக