உயர்த்தப்பட்ட வீட்டு வாடகைப் படியை உடனடியாக வழங்கிட அரசை வலியுறுத்தி குமரி மாவட்டத்தை சார்ந்த நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வருகிற 31-ந்தேதி மாலை 5 மணிக்கு நாகர் கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத் துகின்றனர்.
1998-ல் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட ஆணையின் மூலம் குழித்துறை நகராட்சி மூன்றாம் நிலையில் இருந்து இரண்டாம் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டது. எனவே குழித்துறை நகராட்சி மற்றும் அதன் எல்லையிலிருந்து 8 கீ.மீ. தொலைவிற்குட்பட்ட மேல்புறம், முஞ்சிறை, திருவட்டார், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படியினை உயர்த்தி வழங்க வேண்டும். குழித்துறை கல்வி மாவட்டம் மற்றும் திருவட்டார் ஒன்றிய ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நடத்திய போராட்ட நடவடிக்கையின் காரணமாக மாவட்ட கலெக்டர் 22-7-2010 அன்று வீட்டு வாடகைப்படி உயர்வினை பெறுவதற்கான அனுமதி வழங்கினார்.
தற்போது வீட்டு வாடகை படி உயர்வு மறுஉத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம், முஞ்சிறை, திருவட்டார், கிள்ளியூர் ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் இன்று வரை வீட்டு வாடகைப்படி உயர்த்தி வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்திட வருகிற 31-ந்தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்திற்கு போராட்ட குழு அமைப்பாளர் ஜெரோம் தலைமை தாங்குகிறார். கோபால கிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். மதுரை காமராஜர் மற்றும் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆசிரியர் மன்ற பேராசிரியர் அனந்த கிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் ஆதித்தியன்,
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில அமைப்பு செயலாளர் வள்ளிவேல், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் பாசி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் ஜாண்பிரிட்டோ, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் கழகம் நாகராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். மேலும் குமரி மாவட்ட எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் மாநில தலைவர் மரியதாஸ் முடித்து வைக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை குழித்துறை கல்வி மாவட்டம் மற்றும் திருவட்டார் ஒன்றிய ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு செய்து வருகின்றன.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக