தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

28.8.10

நாகர்கோவில் முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு வேண்டுகோள்


பெறுநர்
            முதன்மை கல்வி அலுவலர் அவர்கள்,
            முதன்மை கல்வி அலுவலகம்,
            நாகர்கோவில்.

            தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் கீழ்காணும் கோரிக்கையினை கனிவுடன்  பரிசீலித்து நிறைவேற்றி தரும்படி வேண்டுகிறோம்.

            1. 1990-91, 1991-1992ஆம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமன நாள் முதல் காலமுறை ஊதிய நிர்ணயம் செய்ய அரசாணை (எண். 336 , ப.க.து. (எம் - 1) நாள் 30.12.2009) பிறப்பிக்கப்பட்டது.  அரசாணை மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தால் குமரி மாவட்டத்தில் உயர் ,மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு நிலுவை ஊதியம் பெற கால தாமதம் ஏற்பட்டுள்ளது.  எனவே விரைவில் தக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம்.

            2. மாணவர் நலன் கருத்தில் கொண்டு 01.08.2010 மாணவர் சேர்க்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிட நிர்ணயம் செய்யும் போது குமரி மாவட்டத்தில் முன் காலங்களில் அமுல்படுத்தியது போன்று வகுப்புக்கு ஓர் ஆசிரியர் வீதம் அனுமதிக்கும்படி வேண்டுகிறோம்.

            3. மாணவர் நலன் கருத்தில் கொண்டு மலையாளம் சிறுபான்மை மொழி ஆசிரியர்களுக்கு பணியிட நிர்ணயம்  செய்யும்போது  G.O. Ms. 341  நாள் : 14.02.1961 படி பாதுகாக்கப்பட்ட சிறுபான்மை மொழி பள்ளிகளுக்கு மாநில அரசு வகுத்துள்ள சிறப்பு விதிமுறைகள் படி வகுப்புக்கு ஒரு ஆசிரியர் வீதம் பணியிட நிர்ணயம் செய்திட வேண்டுகிறோம்.

            4. படைப்பாற்றல் கல்வி முறையில் 6, 7, 8 வகுப்புகளுக்கு ஆங்கிலம் மற்றும் மலையாள வழி மாணவர் பயன்படும் வகையில் SOURCE BOOK  விரைவில் வழங்கும்படி வேண்டுகிறோம்.

            மேற்கண்ட கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடன்.

நன்றி, வணக்கம்.

(ஒப்பம்)
மாவட்ட நிர்வாகிகள்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்