தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

11.7.12

விண்ணப்பதாரர் ரோல் நம்பர், பெயர் தெரிவித்தால் தேர்வு எழுதலாம்:ஆசிரியர் தேர்வு வாரிய உதவி இயக்குனர்

"ஜூலை 12ம் தேதி நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பதாரர் ரோல் நம்பர், பெயர் தெரிவித்து தேர்வு எழுதலாம்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் சேதுராமவர்மா தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: ஜூலை 12ல் நடக்கும் டி.இ.டி., தேர்வு தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் சி.இ.ஓ., டி.இ.ஓ., மற்றும் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன. கேள்வித்தாள் மற்றும் ஓ.எம்.ஆர்., ஷீட்டுகள் ஒவ்வொரு மையத்திலும் 10 சதவீதம் அதிகமாக வைத்திருக்க உத்தரவிடப்பட்டது.

பல விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கெட் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. டி.ஆர்.பி., சார்பில் அனைவருக்கும் ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பிடம் ஒரு இடத்திலும், விண்ணப்பத்தில் வேறு முகவரி குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ஹால்டிக்கெட் கிடைத்திருக்காது. இது ஒரு பிரச்னை இல்லை. விண்ணப்பதாரர் ரோல் நம்பர், பெயர் தெரிவித்தாலே அதை தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் சரிபார்த்து தேர்வு எழுத அனுமதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தவறாக விண்ணப்பித்தவர் கவனத்துக்கு... பெயர், முகவரி உட்பட விண்ணப்பத்தில் தவறாக நிரப்பிய ஒரு லட்சம் விண்ணப்பங்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்கப்பட்டுள்ளன. அந்த விண்ணப்பதாரர்கள் முன்னதாக தேர்வு மையத்துக்கு சென்று சரியான பெயர், முகவரி, பிறந்த தேதிக்கான உரிய கல்வி சான்றிதழை காண்பித்து ஓ.எம்.ஆர்., ஷீட்டில் சரியாக நிரப்பி தேர்வு எழுத அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து தேர்வு மையங்களிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரை தளத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வில் எவ்வித தவறும் நடந்துவிடாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, மதுரை, தேனி மாவட்ட டி.இ.ஓ.,க்கள், தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. சந்தேகங்களுக்கு இணை இயக்குனர் பதில் அளித்தார். மதுரை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுபாஷினி, உசிலம்பட்டி டி.இ.ஓ., சாந்தமூர்த்தி, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் ஞானகவுரி பங்கேற்றனர்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்