தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

1.7.12

அரசு பணியாளர் காப்பீட்டு திட்டத்தில் 113 மருத்துவ சிகிச்சைகளுக்கு ஒப்புதல்

அரசுப் பணியாளர் காப்பீட்டுத் திட்டத்தில் மேலும் 61 மருத்துவச் சிகிச்சைகளை சேர்த்தும், வீடு கட்டும் திட்டத்திற்கான, முன்பண உச்ச வரம்பை உயர்த்தியும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் செய்திக்குறிப்பு:
தற்போது அதிகரித்து வரும் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தை கருத்தில் கொண்டு, கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்காக வழங்கப்படும், வீடு கட்டும் முன்பணக் கடன் உச்ச வரம்பு, 15 லட்சத்தில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட் டது. அகில இந்திய பணி அலுவலர்களுக்கான வீடு கட்டும் முன்பண உச்சவரம்பு 25 லட்சத்தில் இருந்து 40 லட்சம் ரூபாயாக உயர்த்தி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்தி, வரும் நான்கு ஆண்டுகளுக்கு, அதாவது இன்று முதல் வரும் 2016ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி வரை நீட்டித்து, மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான, "யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்" நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தவும் உத்தரவிட்டார். இதை மேம்படுத்த, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், ஏற்கனவே ஒப்பளிக்கப்பட்ட 52 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுடன், கூடுதலாக 61 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 113 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மருத்துவக் காப்பீட்டு நிதியானது இரண்டு லட்சத்தில் இருந்து நான்கு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அளவிற்குட்பட்டு எத்தனை முறை வேண்டுமானாலும், அரசு ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ், அரசு பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் உள்ளிட்ட 13 லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன் பெறுவர்.

 இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்