கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த, 94 குழந்தைகளின் எட்டாம் ஆண்டு நினைவு தினமான நேற்று, குழந்தைகளை இழந்த பெற்றோர், உறவினர்கள், அரசியல் கட்சியினர், பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த, 2004ம் ஆண்டு ஜூலை, 16ம்தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்த, ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில், 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். இத்தீவிபத்தில் உயிரிழந்த குழந்தைகளின், எட்டாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தீ விபத்து நிகழ்ந்த பள்ளி முன் குழந்தைகளை இழந்த பெற்றோர் சார்பில், நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் படங்கள் அடங்கிய டிஜிட்டல் போர்டு, பள்ளி முன் வைக்கப்பட்டிருந்தது. அந்த டிஜிட்டல் போர்டு, குழந்தைகளை இழந்த பெற்றோர் சங்கம் சார்பில், மலர்கள் அலங்கரிக்கப்பட்டது. படத்தின் முன் மலர் வளையம் வைத்து, பெற்றோரும், உறவினர்களும் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
நேற்று காலை, ஏராளமான மாணவர்கள் பள்ளி செல்வதற்கு முன், தீயில் கருகி இறந்த குழந்தைகளுக்கு, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, குழந்தைகளை இழந்த பெற்றோர் அவரவர் வீட்டில், குழந்தைகளுக்கு பிடித்த தின்பண்டங்களையும், புத்தாடைகளையும், குழந்தைகளின் போட்டோ முன் வைத்தும், கல்லறைகளிலும் படையல் செய்தனர். தொடர்ந்து, குழந்தைகளை இழந்த பெற்றோர், பள்ளியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்திற்கு சென்று, அங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நேற்று காலை முதல், மாலை வரை தீ விபத்து நிகழ்ந்த பள்ளி முன் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை, 6 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டு மடத்துதெரு, காந்திபூங்கா வழியாக மகாமக குளத்திற்கு அகல் தீபம் ஏந்தி வந்து குளத்தில் மோட்சதீபம் ஏற்றினர்.
நன்றி:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக