தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

17.5.11

ஆறு மாத காலம் மகப்பேறு விடுப்பு அளிக்க ஒப்புதல் அளித்து உத்தரவு - முதல் கையெழுத்திலேயே அதிரடி


அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க, மகப்பேறு கால சலுகையாக ஆறு மாத காலம் மகப்பேறு விடுப்பு அளிக்க ஒப்புதல் அளித்து, உத்தரவிடப்பட்டது.
.

தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக ஜெயலலிதா பதவியேற்பு

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். அனைவருக்கும் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றதுடன், அ.தி.மு.க., 146 இடங்களை பிடித்து, தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றது. இதையடுத்து, ஆட்சியமைக்க வருமாறு அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு, கவர்னர் பர்னாலா அழைப்பு விடுத்தார். அதன் பேரில், ஜெயலலிதா கொடுத்த 33 அமைச்சர்கள் பட்டியலுக்கு கவர்னர் ஒப்புதல் தந்தார்.முதல்வராக ஜெயலலிதா, மூன்றாவது முறையாக பதவியேற்றார். 

இதற்கான விழா, சென்னை பல்கலை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு, ஆடம்பரமின்றி அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. காலை 10 மணி முதல், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் ஆயிரக்கணக்கில் வந்தனர்.குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பத்திரிகையாளர் சோ ராமசாமி, தெலுங்கு தேச கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலர் பரதன், தேசிய செயலர் ராஜா, ராஷ்டிரிய லோக்தளம் கட்சித் தலைவர் அஜித் சிங், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன் உட்பட பலர் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்றனர்.


நண்பகல் 12.23 மணிக்கு விழா மண்டபத்துக்கு ஜெயலலிதா வந்தார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் பட்டியலில் இடம்பெற்ற 33 எம்.எல்.ஏ.,க்களும் ஜெயலலிதாவுடன் மேடையில் அமர்ந்தனர். கவர்னர் பர்னாலா 12.40 மணிக்கு மேடைக்கு வந்தார். அவரை பூங்கொத்து கொடுத்து ஜெயலலிதா வரவேற்றார். பின், புதிய அமைச்சர்கள் ஒவ்வொருவரின் பெயரை குறிப்பிட்டு, கவர்னரிடம் ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்தார்.


பின், நாட்டுப்பண் சுருக்கமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இதையடுத்து, 12.45 மணிக்கு தமிழக முதல்வராக ஜெயலலிதா மூன்றாம் முறையாக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பர்னாலா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு படிவத்தில் 12.56 மணி 57 வினாடிகளுக்கு ஜெயலலிதா கையெழுத்திட்டார். பின், அமைச்சர்களாக 33 பேர் பதவியேற்றனர். பதவியேற்றோருக்கு, கவர்னர் பர்னாலா கைகொடுத்து வாழ்த்தினார்.மதியம் 1.47 மணிக்கு தேசிய கீதத்துடன் விழா முடிந்ததும், கவர்னர் முதலில் புறப்பட்டார். அவரை வழியனுப்பிய ஜெயலலிதா, மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து, நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய விருந்தினர்களை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அனைவரும் ஜெயலலிதாவுக்கு சால்வைகள் போட்டு வாழ்த்து தெரிவித்தனர்.


விழாவில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தொழிலதிபர் ஏ.சி.முத்தையா, ஐகோர்ட் நீதிபதிகள், பல்கலை துணைவேந்தர்கள் திருவாசகம், மன்னர் ஜவகர், டாக்டர் மயில்வாகனன், பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் நல்லகண்ணு, மகேந்திரன், மார்க்சிஸ்ட் கட்சி என்.வரதராஜன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், முன்னாள் டி.ஜி.பி.,க்கள் லஷ்மி நாராயணன், நடராஜ், தேவாரம் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 

நிகழ்ச்சிகளை தலைமைச் செயலர் மாலதி தொகுத்தளித்தார்.



நன்றி: 

8.5.11

தேர்தல் பணியில் நேரடியாக பாதித்த பிரச்னைகள்...தேர்தலில் ஓட்டுப்பதிவை மேம்படுத்த கூடிய அம்சங்கள்...

சட்டசபை தேர்தல் பணியில் நேரடியாக பாதித்த பிரச்னைகள் மற்றும் ஓட்டுப்பதிவை மேம்படுத்த கூடிய அம்சங்கள் குறித்து ஓட்டுச் சாவடி தலைமை அலுவலர்களிடம் தேர்தல் கமிஷன் "அதிரடி" கருத்துக்களை கேட்டு வருகிறது. 

தமிழகத்தில் கடந்த மாதம் 13ம் தேதி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இத்தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை வரும் 13ம் தேதி நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் தீவிரமாக செய்து வருகிறது. ஓட்டு எண்ணிக்கையை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு முதற்கட்டமாக மண்டல அளவில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனையடுத்து தொகுதி வாரியாக ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த 13ம் தேதி நடந்த சட்டசபை தேர்தல் பணி குறித்து அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுச் சாவடி தலைமை அலுவலர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொகுதிகளில் இதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஓட்டுச் சாவடி தலைமை அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு கருத்துக்கள் கேட்கப்படுகிறது. இந்த கருத்துக்களை தெரிவிக்கும் ஓட்டுச் சாவடி தலைமை அலுவலர்களின் பெயர், பதவி, ஓட்டுச் சாவடி எண், சட்டசபை தொகுதி, மாவட்டம் போன்ற விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.


தேர்தல் பணியில் பிரச்னைகள்: 

"தேர்தல் பணியில் நேரடியாக பாதித்த பிரச்னைகள்" என்ற தலைப்பில் 
  • ஓட்டுப்பதிவு அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டது, 
  • அலுவலர்களின் விபரங்கள் அடங்கிய தகவல் அமைப்பு உருவாக்கியது
  • தேர்தல் பணி ஆணைகள் வழங்கிய விதம், 
  • பயிற்சி முறைகள் மற்றும் அதற்கான சாதனங்கள் மற்றும் கையேடுகள் வழங்கிய விதம், 
  • ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்ட விதம், 
  • மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்த விதம்
  • தபால் ஓட்டுக்கான படிவம் 12 வழங்கியது மற்றும் படிவம் திரும்ப பெறப்பட்டது 
  • தபால் ஓட்டுச் சீட்டு அனுப்பிய விதம், 
  • தேர்தல் பணி நியமன ஆணை வழங்கியது 
  • 3வது பயிற்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட விதம், 
  • ஓட்டுச் சாவடியில் உணவு, குடிநீர், கழிப்பறை, மின்வசதி மற்றும் பிற வசதிகளின் விபரம் 
குறித்தும் தகவல்கள் கேட்கப்படுகிறது.

இந்த அனைத்து தகவல்களும் மிக நன்று, நன்று, பரவாயில்லை, மோசம் என 4 வகையான பதில்கள் தெரிவிக்கப்பட்டு விபரம் சேகரிக்கப்படுகிறது. இந்த விபரங்களுடன் ஏதாவது ஆலோசனைகள் இருந்தால் அதனையும் தெரிவிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


ஓட்டுப்பதிவை அதிகரிக்க...:

ஓட்டுப்பதிவன்று ஓட்டுப்பதிவை மேம்படுத்த கூடிய அம்சங்கள் என்ற தலைப்பில் 
  • ஓட்டுச் சாவடி நிலை அலுவலரால் நடத்தப்பட வேண்டிய வாக்காளர் உதவி மையம் ஓட்டுப்பதிவு தினத்தன்று இயங்கியதா, 
  • வாக்காளர் சீட்டு வழங்கியது ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு உதவியாக இருந்ததா, 
  • ஓட்டுப்பதிவின் போது மூத்த குடிமக்களுக்கு தனி வரிசை உள்ளது என்பதை அறிவீர்களா,
  • ஓட்டுச் சாவடியில் மூத்த குடிமக்களுக்கு தனி வரிசை இருந்ததா
  • ஓட்டுப்பதிவின் போது மாற்றுத் திறனாளிகளுக்கு வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை என்ற அறிவீர்களா, 
  • ஓட்டுச் சாவடியில் இந்த வசதி நடைமுறைப்படுத்தப்பட்டதா, 
  • மூத்த குடிமக்கள்/மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்கனவே ஓட்டுச் சாவடியில் செய்து தரப்பட்டுள்ள வசதிகளை விட இன்னும் அதிக வசதிகள் தேவையா, 
  • ஆம் எனில் என்னென்ன வசதிகள் வேண்டும். 
  • பார்வையற்ற வாக்காளர்கள் எத்தனை பேர் தங்களது ஓட்டுச் சாவடியில் ஓட்டு போட்டனர், 
  • அவர்களில் எத்தன பேர் பிரெய்லி வசதியை பயன்படுத்தினர், 
  • ஓட்டுச் சாவடி முகவர்கள் ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு நெருக்குதல், இடையூறு ஏதும் கொடுத்தார்களா, 
  •  ஆம் எனில் அதனை எவ்வாறு எதிர்கொண்டீர்கள், 
  • ஓட்டுச் சாவடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்ததா, 
  • இக்கேமரா ஓட்டுப்பதிவில் ஆள் மாறாட்டத்தை தடுக்க உதவியதா, 
  • இல்லை எனில் காரணம், 
  • ஓட்டுச் சாவடியில் நுண் பார்வையாளர்கள் ஓட்டுப்பதிவில் ஆள் மாறாட்டத்தை தடுக்க உதவினார்களா, 
  • இல்லை எனில் காரணம்  
  • ஓட்டுச் சாவடியில் மிக முக்கிய நபர்கள் ஓட்டு போடும் போது பிரச்னைகளை எதிர்கொண்டீர்களா, 
  • ஓட்டுப்பதிவின் போது பத்திரிக்øயாளர்கள்/புகைப்படகாரர்கள் முறையாக நடந்து கொண்டனரா, அறிவுரைகளை பின்பற்றினார்களா, 
  • தேர்தல் பணிக்கு வழங்கப்பட்ட ஊதியம், மதிப்பூதியம் போதுமானதாக இருந்ததா, 
  • இந்த ஊதியம் தாமதமில்லாமல் வழங்கப்பட்டதா, 
  • 49 "O" குறித்து விபரம், 
  • ஆய்வுக்குரிய ஓட்டுச் சீட்டுகள் குறித்த விபரம் 
போன்ற கேள்விகளும் கேட்கப்படுகிறது. 
இந்த கேள்விகள் அனைத்தும் ஆம், இல்லை என இரு வகையான விடைகள் அளிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதற்கான காரணங்களை தெரிவிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.


மொத்தத்தில் ஓட்டுப்பதிவின் போது உங்களது பணி அனுபவம் குறித்தும் விபரம் கேட்கப்படுகிறது. இதில் மிக நன்று, நன்று, பரவாயில்லை, மோசம் என 4 வகையான விடைகள் தரப்பட்டு மோசம் எனில் காரணம், ஏதாவது ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கேட்பின் மூலம் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து மதிப்பிடப்பட்டு வருங்காலத்தில் ஓட்டுப்பதிவின் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்ளவும், ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தேர்தல் கமிஷன் ஆலோசனை செய்து உரிய முடிவுகளை அறிவிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றி: 

ஒரு லட்சத்து 46 ஆயிரம் தபால் ஓட்டுகள் யாருக்கு?

தேர்தல் பணியில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட்டிருந்தும், தபால் ஓட்டுகளை போட, 1 லட்சத்து, 46 ஆயிரம் பேர் தான் ஓட்டுச் சீட்டுகளை பெற்றுள்ளனர். அதுவும், நகர்ப்புறங்களில், தபால் ஓட்டுப் போட, அரசு ஊழியர்களிடையே ஆர்வமில்லை. கிராமப்புற தொகுதிகளில் தான், அதிகளவு ஊழியர்கள், தபால் ஓட்டுச் சீட்டுகளை பெற்றுள்ளனர்.


தமிழக சட்டசபை தேர்தலில், 2 லட்சத்து, 88 ஆயிரம் அரசு ஊழியர்கள், 66 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பல ஆயிரம் போலீசார், தேர்தல் பணியில் ஈடுபட்டனர். மொத்தம், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டிருந்ததால், இவர்களுக்கென, அவர்கள் வசிக்கும் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தபால் ஓட்டுப் போட, அந்தந்த துறைகள் மூலம், ஓட்டுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.இது தவிர, ராணுவத்தில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தபால் ஓட்டுப் போட, ஓட்டுச் சீட்டுகள் வழங்கப்பட்டன. இதில், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், போலீசார், முன்னாள் ராணுவத்தினர் என, மொத்தம், 1 லட்சத்து, 46 ஆயிரத்து, 255 பேர் தான் ஓட்டுச் சீட்டுகளை பெற்றுள்ளனர்.அதேபோல, ராணுவ வீரர்களில், 65 ஆயிரத்து, 274 பேர் ஓட்டுச் சீட்டுகளை பெற்றுள்ளனர். தடுப்பு காவல் கைதிகளில், 51 பேர், தமிழகம் முழுவதும் தபால் ஓட்டுச் சீட்டுகளை பெற்றுள்ளனர். இதன்படி, மொத்தம், 2 லட்சத்து, 11 ஆயிரத்து, 580 தபால் ஓட்டுச்சீட்டுகள் இந்த தேர்தலில் வழங்கப்பட்டுள்ளன.


இதில், சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற நகர்ப்பகுதிகளில், தபால் ஓட்டுப் போட, அரசு ஊழியர்கள் ஆர்வம் காட்டவில்லை. சென்னையில் அதிகபட்சமாக, கொளத்தூர் தொகுதியில் தான், 574 பேர் தபால் ஓட்டுச்சீட்டுகளை பெற்றுள்ளனர். மற்ற தொகுதிகளில், மிக குறைவான அளவிலேயே பெற்றுள்ளனர்.அதிகபட்சமாக, தஞ்சாவூர் தொகுதியில், 1,714 பேர், ஓட்டுச் சீட்டுகளை பெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, பாளையங்கோட்டை தொகுதியில், 1,690 பேர் பெற்றுள்ளனர். தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியான சோழிங்கநல்லூரில், வெறும், 81 பேர் தான், தபால் ஓட்டுப் போட விருப்பம் தெரிவித்துள்ளனர்.


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில், ஒன்றில் கூட, ஒருவர் கூட தபால் ஓட்டுச் சீட்டு பெறவில்லை. இங்குள்ள ஊழியர்களுக்கு சரியான முறையில் ஓட்டுச்சீட்டுகள் வினியோகிக்கப்படவில்லையா அல்லது ஒட்டுமொத்த ஊழியர்களும் தபால் ஓட்டுகளை புறக்கணித்துள்ளனரா என தெரியவில்லை.ராணுவ வீரர்களை பொறுத்தவரை, வேலூர் மாவட்டத்தில் தான் மிக அதிகமாக, 12 ஆயிரத்து, 498 பேர், தபால் ஓட்டுப் போட முன்வந்துள்ளனர். இதில், கே.வி.குப்பம் தொகுதியில், 2,299 பேரும், அணைக்கட்டு தொகுதியில், 1,973 பேரும், காட்பாடி தொகுதியில், 1,961 பேரும் தபால் ஓட்டுச் சீட்டுகளை பெற்றுள்ளனர். ராணுவ வீரர்களில் மிகக் குறைந்த அளவாக திருப்போரூர் தொகுதியில், ஏழு பேர் மட்டும் பெற்றுள்ளனர்.அரசு ஊழியர்களில் அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டத்தில், 8,117 பேர் ஓட்டுச் சீட்டு பெற்றுள்ளனர். பொதுவாக, தேர்தல்களில், ஒரு தரப்புக்கு சாதகமாகவோ, எதிராகவோ அலை வீசாத நிலையில், கடும் போட்டி நிலவினால், தபால் ஓட்டுகள், அதிக தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கின்றன. பெரும்பாலான தொகுதிகளில், தபால் ஓட்டுகள் தான் முதலில் எண்ணப்படும். சில தொகுதிகளில், கடைசியாக எண்ணப்படுவதுண்டு.


கடந்த, 2006 தேர்தலில், பா.ம.க., வேட்பாளர் வேல்முருகனை விட, அ.தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரன், இறுதிச் சுற்றில், 16 ஓட்டுகள் முன்னணி பெற்றிருந்தார். அ.தி.மு.க., தொண்டர்களும் பட்டாசுகள் வெடித்தனர். ஆனால், கடைசியாக தபால் ஓட்டு எண்ணப்பட்டதில், ராஜேந்திரனுக்கு, 33 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. பா.ம.க., வேல்முருகனுக்கு, 197 ஓட்டுகள் கிடைத்தது. இதனால், 148 ஓட்டு வித்தியாசத்தில், வேல்முருகன் வெற்றி பெற்றார்.


இதேபோல, பொங்கலூர் தொகுதியில், அ.தி.மு.க., அமைச்சர் தாமோதரன், 57 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மதுரை கிழக்கு தொகுதியில், ஓட்டு எண்ணிக்கையின் போது, இறுதிச் சுற்றில் ம.தி.மு.க., வேட்பாளர் பூமிநாதன், 80 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார். தபால் ஓட்டுகளை எண்ணியதில், மார்க்சிஸ்ட் வேட்பாளர் நன்மாறனுக்கு, 157 ஓட்டுகளும், பூமிநாதனுக்கு, 77 ஓட்டுகளும் கிடைத்தது. நன்மாறன் வெற்றி பெற்றார்.இந்த தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் கடும் போட்டி நிலவுவதால், வெற்றி பெறும் வேட்பாளர், குறைந்த ஓட்டு வித்தியாசமே பெற வாய்ப்புள்ளது. எனவே, இந்த தேர்தலில் தபால் ஓட்டுகள் மிகவும் முக்கியத்துவம் பெறும். ஆனால், தபால் ஓட்டுப் போட தகுதியுள்ள அரசு ஊழியர்களில் பாதியளவுக்கும் மேலானவர்கள், ஓட்டுச்சீட்டுகளையே பெறாததால், யாருக்கு பலன் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நன்றி: 

சமச்சீர் கல்வி முறையில் சமூக அறிவியல் பாடத்திற்கு கூடுதல் பாடவேளை ஒதுக்க கோரிக்கை

சமச்சீர் கல்வி முறையில் சமூக அறிவியல் பாடத்திற்கு கூடுதல் பாடவேளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பள்ளிகளில் தமிழ், அறிவியல் போல சமூகஅறிவியல் பாடமும் கற்பிக்கப்படுகிறது. இதில் வரலாறு, புவியியல் மற்றும் குடிமையியல் பாடங்கள் உள்ளன. ஆறு முதல் 10ம் வகுப்பு வரை இப்பாடம் கற்பிக்க 5 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.இது குறைவாக உள்ளது. கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டுமென, சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் கருதுகின்றனர். 

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களுக்கு வாரம் 7 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. ஆனால் அவற்றைவிட கூடுதல் பாடங்கள் சமூக அறிவியல் பாடத்தில் உள்ளன. தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள சமச்சீர் கல்வி முறையில், சமூக அறியவிலில், வரலாறு பாடத்தில் பொருளாதாரமும், குடிமையியலில் சட்டம் குறித்தும் கூடுதலாக பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் பாடங்கள் பளு அதிகரித்துள்ளது. இவை தவிர இணைப்பு பாடத்தோடு வரைபடங்கள் (மேப்), காலக்கோடு, சுகாதாரம், களப்பணி ஆகிய பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் சமூக அறிவியல் பாடத்திற்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது.

தமிழ்ப் பாடத்திற்கு ஆரல், ஓரல் தேர்வு உள்ளது. அறிவியல் பாடத்தில் இந்த ஆண்டு செய்முறை தேர்வும் இடம்பெற உள்ளது. இதனால் மதிப்பெண் பெறுவது எளிதாகிறது. ஆனால் சமூக அறிவியல் பாடத்திற்கு இந்த வாய்ப்பு இல்லை. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற உயர் பதவிகளுக்கான போட்டித் தேர்வுக்கு சமூக அறிவியல்தான் அடித்தளமாக உள்ளது. அப்படி இருக்கையில் இதை புறக்கணிக்கும் வகையில் குறைந்தளவில் பாடவேளை ஒதுக்குவதை ஏற்க முடியாது என்கின்றனர் ஆசிரியர்கள். 

சமூக அறிவியல் பாடத்திற்கு கூடுதல் பாடவேளை கேட்டு, பள்ளிக் கல்வி சமூக அறிவியல் கூட்டமைப்பின் சார்பில் 2009, அக்டோபரிலேயே முதல்வரின் தனிப்பிரிவிற்கு தெரிவிக்கப்பட்டு, பள்ளிக் கல்வி இயக்குனருக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கு நடவடிக்கை இல்லை. 

இதையடுத்து அந்தக் கூட்டமைப்பின் கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் கூறுகையில், "சமச்சீர் கல்வி முறையிலாவது கூடுதல் பாட வேளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்," என்றார்.

நன்றி: 


அரசு பள்ளிகளில் கல்வி கட்டணம் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக கட்டாயமாக கல்வி பெற உரிமை உண்டு. 
  • ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளியில் சேராமலோ அல்லது இடையில் நின்றிருந்தாலோ, அன்றைய வயதுக்கேற்ப வகுப்பில் சேரலாம். 
  • சேர்க்கையின்போது மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது. 
  • நுழைவுத்தேர்வு போன்ற எவ்வித பரிசீலனைக்கும் உட்டுபடுத்தக்கூடாது. 
  • வயது சான்றிதழ் இல்லாத நிலையில் அதை காரணமாகக்கூறி சேர்க்கை மறுக்கக்கூடாது. 
  • சேர்க்கைக்கு குறிப்பிட்ட கால அவகாசம் முடிவடைந்திருந்தாலும் தாமதமாக வரக்கூடியவர்களை பள்ளியில் சேர்க்கலாம் 
என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

நன்றி: 

 

பள்ளி துவங்கியவுடன் இலவச பஸ் பாஸ்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கிய ஒரு வாரத்திற்குள், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தர, அரசு உத்தரவிட்டுள்ளது. 

பள்ளியில் படிக்கும் மாணவர்களின் விபரம், பாஸ்போர்ட் அளவு போட்டோக்களை (2), தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வித்துறைக்கு, பள்ளி துவங்கிய உடன் வழங்க வேண்டும். போக்குவரத்து துறைக்கு இவ்விபரம் அனுப்பப்பட்டு, ஒரு வாரத்திற்குள் மாணவர்களுக்கு பஸ் பாஸ் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
நன்றி: 

 

கட்டாய கல்வி சட்டம் அமல்படுத்தமுதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டம்

தமிழகத்தில் கட்டாய கல்வி சட்டத்தை அமல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள் மே 11 ல் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது.

மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தினை கடந்த கல்வியாண்டு அறிமுகம் செய்தது. 14 வயதிற்குட்பட்ட அனைவரும் கல்வி கற்றிருக்க வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் நோக்கமாகும். இதனை அமல் படுத்த பள்ளி கல்வித்துறை தீவிர முயற்சி எடுத்து வருகிறது. மே 11 ல் சென்னையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. 

14 வயது நிரம்பிய அனைவருக்கும் கற்பிக்க என்ன நடவடிக்கை எடுப்பது. எப்படி செயல்படுத்துவது குறித்து தெரிவிக்கப்படவுள்ளது. சமச்சீர் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்வது குறித்தும், மே 20 க்குள் பத்தாம் வகுப்பு "ரிசல்ட்' வெளியிடுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

நன்றி: 

 

1.5.11

கல்விக்கு ஒதுக்கிய நிதி முழுவதும் வழங்கவில்லை


மத்திய அரசு, 11வது ஐந்தாண்டு திட்டத்தில், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு ஒதுக்கிய நிதியை, முழுவதும் வழங்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
11வது ஐந்தாண்டு திட்டத்தில் சமூக துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, உள்கட்டமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், பெண்கள், குழந்தைகள் நலத்திட்டங்கள் மற்றும் விவசாயத்திற்கு குறைவாகவே ஒதுக்கீடு செய்துள்ளது. சுகாதாரம், கல்விக்கு 60 சதவீத நிதி மட்டுமே கிடைத்துள்ளது. இந்த திட்டம், 2012ம் ஆண்டில் முடிவடைகிறது. 

சுகாதார துறைக்கு ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதில், 75 ஆயிரத்து 533 கோடி ரூபாய் தான் கிடைத்துள்ளது. கல்விக்கு ஒதுக்கப்பட்ட 2 லட்சத்து 38 ஆயிரத்து 600 கோடி ரூபாயில், ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 659 கோடி ரூபாய் தான் கிடைத்துள்ளது.

எனவே, '12வது ஐந்தாண்டு திட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்' என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திட்ட கமிஷன் வலியுறுத்தி உள்ளது. 

நன்றி: 


மதுரை காமராஜ் பல்கலை பி.எட்., செய்முறை தேர்வு

மதுரை காமராஜ் பல்கலையில் தொலைநிலைக் கல்வி இயக்கத்தில் 1995 -96 ம் ஆண்டும், அதற்கு முன்பு பி.எட்., படிப்பில் சேர்ந்தவர்களுக்கான செய்முறை தேர்வு நடைபெற உள்ளது.
 
தொலைநிலைக் கல்வி இயக்குனர் தனிக்கொடி அறிக்கை:
1995 -96 மற்றும் அதற்கு முன்பும் பி.எட்., பட்டப்படிப்பில் சேர்ந்து, பயின்று வந்த பழைய மாணவர்களின் அனைத்து பாடங்களின் எழுத்து தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, வளாக பயிற்சியிலும், செய்முறை தேர்விலும் கலந்து கொள்ளாத அல்லது செய்முறைத் தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்காக, வளாக பயிற்சி மற்றும் செய்முறைத் தேர்வு வரும் ஜூனில் மதுரை மையத்தில் நடைபெறும். விபரங்களுக்கு ஏப்., 16க்குள் இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும், என குறிப்பிடப்பட்டுள்ளது. 

நன்றி: 



பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்