ஆண்டுக்கு இரண்டு முறை
அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தை மையமாக
வைத்து அகவிலைப்படி வழங்கப்படுகிறது. 2012 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி
உயர்த்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வந்தது. விலைவாசி உயர்வு, பண
வீக்கம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு எத்தனை சதவீதம் அகவிலைப்படி வழங்குவது
என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போதைய விலைவாசி உயர்வை
கருத்தில் கொண்டு 7 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு முடிவு
செய்துள்ளது. அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. விரைவில்
இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 1ம்
தேதியில் இருந்து இந்த அகவிலைப்படி உயர்வு கணக்கிடப்படும். அடிப்படை
ஊதியம், கிரேடு சம்பளம் ஆகியவற்றில் ஏற்கனவே 58 சதவீதம் அகவிலைப்படி பெற்று
வரும் மத்திய அரசு ஊழியர்கள் தற்போது உயரும் 7 சதவீதத்துடன் இனி 65
சதவீதம் பெறுவார்கள்.
நன்றி:
Sikiram varattum sir
பதிலளிநீக்கு