தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

26.4.11

டீ கடை பெஞ்சு - சாஸ்திரா பி.எட். விவகாரம்


"அரசு முடிவெடுக்காததால, பள்ளி மாணவர்களுக்கு தான் பாதிப்பாம் வே...'' என்றபடி, பெஞ்சில் வந்து அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.

"எந்த விஷயத்துல பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

"தஞ்சாவூர் சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலையில தபால் வழியா, இடைநிலை ஆசிரியர்கள் பலர், பி.எட்., படிச்சிருந்தாங்க... இவங்களுக்கு பட்டதாரி ஆசிரியரா பதவி உயர்வு வழங்குறதுல போன வருஷம் மே மாசம் பிரச்னை ஏற்பட்டது வே... இந்த பட்டத்தை அரசு ஏற்க மறுத்ததால, சென்னை ஐகோர்ட்டிலும், மதுரை ஐகோர்ட் கிளையிலும் ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தாங்க...

"மதுரை ஐகோர்ட் பிறப்பிச்ச இடைக்கால உத்தரவுல, "விசாரணை முடியும் வரை, தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு அந்தந்த ஒன்றியத்துல இருக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவிகளை நிரப்ப வேண்டாம்''ன்னு தெரிவிச்சது... ஒரு வருஷமாகியும் இந்த பிரச்னைக்கு தனியார் பல்கலை நிர்வாகமோ, தமிழக அரசோ தீர்வு காணலை வே... அதனால, 1,300 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை காலியாவே வைச்சிருக்காங்க... இந்த பிரச்னையில பாதிக்கப்பட்டது, சம்பந்தப்பட்ட நடுநிலைப் பள்ளி மாணவர்களோட கல்வித் தரம் தான் வே... ஆனா, இதே பல்கலையில இதுக்கு முன்னால பி.எட்., முடிச்சவங்க, அதுக்கான ஊக்க சம்பளத்தை வாங்கிட்டு தான் இருக்காங்களாம்...'' எனக் கூறி முடித்தார் அண்ணாச்சி.

நன்றி


1 கருத்து:

  1. மேற்காண் சம்பவம் காட்டுவது பணம் சம்பாதிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் உண்மை கொரூபம் இதுவே, பொறுப்பற்ற நிலையில் உள்ள அரசு என்பதுவே.

    பதிலளிநீக்கு


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்