சட்டசபை தேர்தலில் எத்தனை வகையான ஓட்டுகளை பதிவு செய்யலாம் என்பது குறித்து தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
எதிர்க்கப்பட்ட ஓட்டு(சேலன்ஞ் ஓட்டு): ஓட்டு போட ஒருவர் வரும் போது, "இவர் உண்மையான நபர் இல்லை' என எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சி ஏஜன்டிடம் 2 ரூபாய் பெற்றுக் கொண்டு ரசீது வழங்க வேண்டும். படிவம் 14ல், சம்பந்தப்பட்டவரின் பெயர், முகவரி பதிவு செய்து கையெழுத்து அல்லது விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். பின்னர் ஓட்டு போட வந்தவர், "சரியான நபரா' என அறிந்த பின்னரே ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும். போலி வாக்காளர் என்றால் போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரைய்லி முறையில் படிக்க தெரியாத பார்வையற்றவரோ, முற்றிலும் உடல் இயக்கம் இல்லாதவர் என்றால், ஓட்டளிக்க உதவியாளரை உடன் அழைத்து வரலாம். அவருக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். படிவம் "14ஏ'ல் பதிவு செய்ய வேண்டும். "ஓட்டுப்பதிவு ரகசியம் காப்பேன்' என சான்றழித்த பின்னர் ஒட்டுப்பதிய அனுமதிக்கலாம்.
49 ஓ: யாருக்கும் ஓட்டு போட விரும்பவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் உள்ள அவரது வரிசை எண்ணை 17 ஏ படிவத்தில் குறிக்க வேண்டும். ஓட்டளிக்க மறுப்பதற்கான காரணம் குறித்து கேட்டு, அவரிடம் கையெழுத்து பெற வேண்டும். மறுக்கப்பட்ட ஓட்டு என எழுதி கையெழுத்திட வேண்டும்.
டெண்டர் ஓட்டு: ஒருவருடைய ஓட்டு, வேறு நபரால் போடப்பட்டிருந்தால், உண்மையான வாக்காளர் வந்தால், அவரது அடையாள ஆவணங்களை சரி பார்த்து டெண்டர் ஓட்டு சீட்டு கொடுத்து ஓட்டுப்பதிய அனுமதிக்க வேண்டும். இந்த வாக்காளர்களை பேலட் யூனிட்டில் ஓட்டளிக்க அனுமதிக்க கூடாது. ஓட்டுப்பதிவை 17 பி பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
49-எம்: ஓட்டளிக்க வருபவர் இவருக்கு தான் ஓட்டளிக்க போகிறேன் என தெரிவித்தால், தேர்தல் ரகசியத்தை மீறியவராகிறார். 49 எம் விதியின் கீழ், இவரது ஓட்டுரிமையை ரத்து செய்து ஓட்டுச் சாவடியை விட்டு வெளியே அனுப்ப வேண்டும்.
பதிலி ஓட்டு: ராணுவத்தில் பணிபுரியும் நபர்களுக்கு பதிலாக, பதிலி வாக்காளர் ஓட்டளிக்க வரும் போது, தனக்கு ஓட்டளிக்கும் போது ஆள்காட்டி விரலில் ஏற்கனவே ஓட்டு போட்டதற்கான மை அடையாளம் இருந்தால், நடுவிரலில் அடையாள மை இட வேண்டும். 17 ஏ பதிவேட்டில் பதிவு செய்யும்போது பதிலி ஓட்டு என பதிய வேண்டும்.
இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக