கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பேரவைத் தேர்தலையொட்டி, வாக்குச்சாவடிகளில் பணிபுரிய நியமனம் செய்யப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை (ஏப். 12) நடைபெறும் பயிற்சி வகுப்பு முடிந்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு செல்ல வசதியாக ஒரு மண்டலத்துக்கு ஒரு பேருந்து, 2 சிற்றுந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை தாங்கள் பணிபுரியும் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பயிற்சி வகுப்புக்கு வரும்போது தங்களுக்கு தேவையான உடைமைகளையும், மதிய உணவையும் எடுத்துவர வேண்டும். மதிய உணவை முடித்துக்கொண்டு அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பேருந்து மூலம் பணியமர்த்தப்படும் வாக்குச்சாவடியைச் சென்றடையலாம்.
புதன்கிழமை (ஏப். 13) வாக்குப்பதிவு முடிந்து சம்பந்தப்பட்ட பொருள்களை ஒப்படைத்தபின், மண்டலத்தின் கடைசி வாக்குச்சாவடியிலிருந்து ஒவ்வொரு வாக்குச்சாவடியாக வாக்குச்சாவடி அலுவலர்களை அழைத்து, அவர்கள் ஊருக்குச் செல்ல வசதியான இடத்தில் கொண்டு சேர்க்கவும் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நன்றி:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக