தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

29.9.10

சென்னை உண்ணாவிரத போராட்டத்தில் நாமக்கல் மாவட்ட தஇஆச-வினர் திரளாக பங்கேற்க முடிவு

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில், நாமக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. மாவட்டத்தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் மஞ்சுநாதன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் சந்திரமோகன், தமிழ்நாடு உயர், மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத்தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முருகேசன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜேந்திர பிரசாத், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் குப்புசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

கூட்டத்தில், 


  • அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி பணியிடத்துக்கு உட்படுத்த வேண்டும். 
  • ஒரு நபர் குழுவின் பரிந்துரையை மீண்டும் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் இதரப்படிகள் வழங்க வேண்டும். 
  • நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டதிலிருந்து, மாவட்ட தலைநகருக்கு உரிய வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும். 
  • ஓய்வு பெற்ற இடைநிலை ஆசிரியர் (பணி நீட்டிப்பு காலத்தில்) சி.ஆர்.சி., கூட்டத்தில் பங்கேற்றால் அதற்கான ஈடுசெய் விடுப்பு வழங்க வேண்டும். 
  • மாவட்டத் தலைவர் ஜெயச்சந்திரன், தமிழ்நாடு அரசு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு மாவட்ட அமைப்பாளராக நீட்டிக்க வேண்டும்
 என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் புதிய மாவட்டத் தலைவராக பெரியசாமியும், பொருளாளராக ஜெயந்தியும் தேர்வு செய்யப்பட்டனர். 

மேலும், அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி பணியிடத்துக்கு உட்படுத்த வலியுறுத்தி சென்னை காயிதே மில்லத் மணிமண்டபம் அருகே அக்டோபர் 8ம் தேதி நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து  இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. 



நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளர் மதிவாணன், மங்கையர்கரசி, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்