தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

24.9.10

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியீடு

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் கருணாநிதி இன்று உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அரசு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம்அகவிலைப்படியை 1.7.2010 முதல் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 1.7.2010 முதல் 10 சதவீதம் அக விலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார்.

உயர்த்தப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி 1.7.2010 முதல் நிலுவையின்றி ரொக்கமாக வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.2ஆயிரத்து 190 கோடி கூடுதலாக செலவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


அரசாணை எண்: 371 நாள்: 24-09-2010
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்