இது தொடர்பாக முடிவெடுக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி இயக்குநர்களின் கூட்டம் செப்டம்பர் 10-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அக்கூட்டம் செப்டம்பர் 15-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆலோசனை வழங்கும் நிதி மற்றும் முதலீட்டு கமிட்டி (எஃப்.ஐ.சி.) 8.5 சதவீதம் வட்டி வழங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையே ஏற்கப்படும் என்பதால் 2010-11-ம் நிதியாண்டுக்கும் 8.5 சதவீதம் வட்டியே அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
2005-06 முதல் வருங்கால வைப்பு நிதிக்கு 8.5 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்னர் 3 ஆண்டுகள் 9.5 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 4.71 கோடி பேர் சந்தாதாரர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக