தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

29.9.10

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் சிறப்பூதியம் பெறுவதில் சிக்கல்


தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு 6வது ஊதிய குழு அமல்படுத்தப்பட்டது. இதில் பல்வேறு முரண்பாடுகள் நிலவுவதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதில் குறிப்பாக, இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தை 5,200 - 20,200, தர ஊதியம் 2,800ல் இருந்து 9,300 - 34,800, தர ஊதியம் 4,200 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகின்றனர். முதுகலை ஆசிரியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தை 21 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கோரி வருகின்றனர். இந்நிலையில் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பூதியமாக 500 ரூபாய் என அறிவிக்கப்பட்டது. இந்த சிறப்பு ஊதியம் 1.8.2010 முதல் அமல்படுத்தப்பட்டது.


இந்த சிறப்பூதியம் வழங்க கருவூல அதிகாரிகள் தர ஊதியத்தை கணக்கில் எடுப்பதால் 2,800 ரூபாய்க்கும் கூடுதலாக தர ஊதியம் பெறும் தேர்வு நிலை, சிறப்பு நிலை அந்தஸ்து பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் சிறப்பூதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரிர்கள் சங்க மாநில அமைப்பு செயலாளர் இசக்கியப்பன் கூறும் போது, 10 ஆண்டுகள் பணிபுரிந்து 1.1.2006க்கு முன்பு தேர்வு நிலை பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் தர ஊதியமாக 4,200 ரூபாயும், சிறப்பு நிலை பெற்ற ஆசிரியர்கள் தர ஊதியமாக 4,500 ரூபாயும் பெறுகின்றனர். இவர்கள் அடிப்படை சம்பளமாக 5,200-20,200 ரூபாய் பெற்று வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் ஒரு சில கருவூல அதிகாரிகள் 2,800 ரூபாய் தர ஊதியம் பெறுபவர்களுக்கு மட்டும் சிறப்பூதியம் வழங்க முடியும் என கூறுகின்றனர். இதனால் தர ஊதியம் கூடுதலாக பெறும் ஆசிரியர்கள் சிறப்பூதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற குளறுபடிகளை களைய வேண்டும்'' என்றார்.  

இதற்கிடையில் ஒரு நபர் கமிஷன் பரிந்துரை குளறுபடிகளை கண்டித்து டிட்டோஜாக் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தப்பட்டது. அடுத்த கட்டமாக மாநில அளவில் சென்னையில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதுகலை ஆசிரிய சங்கங்கள் இணைந்து "ஜாக்' சார்பிலும் பல்வேறு கட்ட போராட்டங்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் தொடக்க நிலை முதல் முதுகலை வரை அனைத்து ஆசிரிய சங்கங்களும் இணைந்து கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்களும் நடத்த ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. கொள்கைகள் அடிப்படையில் பிரிந்து கிடக்கும் சங்கங்கள் தற்போது "அதிசயமாக' ஒற்றுமையாக இணைந்து போராட்டங்களையும் நடத்த முன்வந்திருப்பது ஆசிரிய, ஆசிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  
நன்றி:
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்