தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

13.9.10

ஆசிரியர்களுக்கு வீட்டு வாடகைப்படி: செப். 16 முதல் உண்ணாவிரதம்

ஆசிரியர்களுக்கு உயர்த்தப்பட்ட வீட்டு வாடகைப்படியை உடனடியாக வழங்க வலியுறுத்தி இம்மாதம் 16-ம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் குழித்துறை கல்வி மாவட்டம் மற்றும் திருவட்டார் ஒன்றிய ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் தொடர் உண்ணாவிரதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

குழித்துறை நகராட்சி இரண்டாம் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், இந்த நகராட்சி மற்றும் அதன் எல்லையிலிருந்து 8 கி.மீ. தொலைவுக்குள்பட்ட கிள்ளியூர், முன்சிறை, திருவட்டார், மேல்புறம் ஆகிய ஒன்றியப் பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படியை  உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆக. 31-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.    

இதை அரசு கண்டுகொள்ளாததால்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இம்மாதம் 16-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் நடத்த  தீர்மானிக்கப்பட்டது.   

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு எஸ். ஜெரோம் தலைமை வகித்தார். கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வட்டார அமைப்பாளர்கள் ஜோஸ்பென்சிகர், கிறிஸ்துதாஸ், கனகராஜ், சாம்பிரின்ஸ்குமார் ஆகியோர் பேசினர்.  இதில் தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலகக் கழகம் சார்பில் பயஸ் மோரிஸ், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டணி சார்பில் சந்திரசேகரன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் பாஸி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கிருஷ்ணதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்