தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

14.4.10

பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், கன்னியாகுமரி மாவட்டக் கிளையின் சார்பாக 2009-2010 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி பணி நிறைவு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா நடத்தப்படுகிறது.

நாள்: 17-04-2010, சனி

நேரம்: மாலை 3 மணி

இடம்: அரசு ஊழியர் இல்லம், தக்கலை.

தலைமை

திரு. V. L. சேம் பிறின்ஸ் குமார்
 மாவட்டத் தலைவர்.

வரவேற்புரை: திரு. S.ஆதிமணி, வட்டாரத் தலைவர், இராஜக்கமங்கலம்.

வாழ்த்துரை:
  • திரு. ம. எட்வின் பிரகாஷ், மாவட்டச் செய்தித் தொடர்பாளர்.
  • திரு. G. பாஸி, மாவட்டச் செயலாளர்.
  • திரு. கோ. பூதலிங்கம் பிள்ளை, மாவட்ட அமைப்புச் செயலாளர்.
  • திரு. P. திவாகரன் பிள்ளை, மாவட்டப் பொருளாளர்.
மற்றும்
  • வட்டார நிர்வாகிகள்.
சிறப்புரை

திரு. க. இசக்கியப்பன்
மாநில அமைப்புத் தலைவர்.

நன்றியுரை: திரு. K. ஹரிகுமார், வட்டாரச் செயலாளர்.

பணி நிறைவு பெறும் அனைத்து ஆசிரியப் பெருமக்களும் இயக்க உறுப்பினர்களும்  கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்குமாறு அனபுடன் அழைக்கிறோம்.
.

    6.4.10

    திரிசங்கு நிலையில் இருபத்தெட்டாயிரம் இடைநிலை ஆசிரியர்கள்

     தமிழகத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 28 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், திரிசங்கு நிலையில் பதவி உயர்வு இல்லாமல் பரிதவிக்கின்றனர். 

    தமிழகத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களாக, இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது 2002ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. அதிலிருந்து, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால், ஏற்கனவே உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் 28 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பதவி உயர்வு இல்லை: உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், இன்றும், பட்டதாரி ஆசிரியர்கள் பாடம் நடத்தும் 6 முதல் 10ம் வகுப்பு வரை அதே பாடங்களைத் தான் மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். இருந்தும் இவர்களுக்கு பதவி உயர்வு, மற்ற சலுகைகள் வழங்கப்படவில்லை. 2002ம் ஆண்டு முதல் இன்று வரை இடைநிலை ஆசிரியர்கள் நிலையிலேயே பணியாற்றி வருகின்றனர்.

    தரம் உயர்த்த வேண்டும்: உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் பலர் பட்டதாரிகளாகவும், முதுநிலை பட்டதாரிகளாகவும் பட்டம் பெற்றுள்ளனர். இருந்தும் அரசு, இடைநிலை ஆசிரியர்களை இன்று வரை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க முன் வரவில்லை. இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு சிறப்பு பயிற்சிகள் வழங்கி பட்டதாரி ஆசிரியர்களாக தரம் உயர்த்தி பணி நியமனம் செய்திட வேண்டும்.

    பல போராட்டங்கள்: 28 ஆயிரம் ஆசிரியர்கள் தங்களை தரம் உயர்த்தக் கோரி உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டங்கள், முதல்வர் முதல் பள்ளிக்கல்வி அமைச்சர் வரை பல முறை கோரிக்கைகள் விடுத்தும், இன்று வரை அரசு நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. 28 ஆயிரம் ஆசிரியர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

    திரிசங்கு நிலையில் இடைநிலை ஆசிரியர்கள்: பாதிக்கப்பட்டுள்ள 28 ஆயிரம் ஆசிரியர்களில் பலர் ஓய்வு பெற்று வருகின்றனர். அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களைப் பற்றி கண்டு கொள்ளாததால் பல ஆண்டுகளாக பதவி உயர்வு, சம்பள உயர்வு இல்லாமல் ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனர். சம்பள விதியும் குறைவாகக் கிடைப்பதால், திரிசங்கு நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் பரிதவித்து வருகின்றனர். அரசும், பள்ளிக் கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


    நன்றி: தினமலர் 06-04-2010

    5.4.10

    இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உட்படுத்த வலியுறுத்தி தர்ணா - ஆர்பாட்டம்

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் நாகர்கோவிலில் சனிக்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 28 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உள்படுத்தும் கோரிக்கையை கல்வி மானியத்தில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.  

    நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் சேம்பிரின்ஸ் குமார்,  நிம்ரோத், சந்தன கருப்பையா ஆகியோர் தலைமை வகித்தனர்.  அமிர்தராஜ், தமிழ்ராஜன், ரவிச்சந்திரன், திவாகரன்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சுந்தர்ராஜ், முருகேசன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.  மாநில இணைச் செயலர் பாஸி, துணைத் தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  மாநில பொருளாளர் உதயசூரியன் நிறைவுரையாற்றினார்.


    28.3.10

    மாநிலம் தழுவிய மண்டல பெருந்திரள் தர்ணா - ஆர்பாட்டம்

    உயர் / மேல் நிலை ப்பள்ளிகளில் பணிபுரியும் 28000 இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உட்படுத்திடும் கோரிக்கையை வலியுறுத்தி 

    தமிழக முதல்வரின் 

    கவனத்தை ஈர்த்திடும் வகையில் 
    மாநிலம் தழுவிய மண்டல பெருந்திரள் தர்ணா - ஆர்பாட்டம்  

     03-04-2010 சனிக்கிழமை அன்று தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தால் நடத்தப்படுகிறது.
    .

    27.3.10

    முறைகேடான இடமாற்றம் - கல்வித்துறையைக் கண்டித்து ஆர்பாட்டம்

    இடைநிலை ஆசிரியர் திரு. செல்வராஜ் முறைகேடாக மாறுதல் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து 25-03-2010 மாலை 5மணி அளவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது.


    த.இ.ஆ.ச. மாவட்டத் தலைவர் திரு.சேம் பிறின்ஸ் குமார் தலைமை தாங்கினார்.

     மாவட்டச் செயலாளர்  திரு. பாஸி முன்னிலை வகித்தார்.

    திரு. பூதலிங்கம்பிள்ளை ஆர்பாட்டத்தைத் துவக்கிவைத்தார்.

     தோழமைச் சங்க நிர்வாகிகள் திருவாளர்கள் சிம்சன், பிரிட்டோ, நாகராஜன், சேவியர், இராதாகிருஷ்ணன், அனந்தகிருஷ்ணன், விக்ரமன் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர்.

    த.இ.ஆ.ச. மாநில அமைப்புச் செயலாளர் திரு. இசக்கியப்பன் ஆர்பாட்டத்தை முடித்து வைத்து நிறைவுரையாற்றினார்.

    திரு. திவாகரன் பிள்ளை நன்றி கூறினார்.
    கோரிக்கையை  வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
    .

    24.3.10

    மாபெரும் ஆர்பாட்டம்

    எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் S. L. B. ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர் திரு. T. செல்வராஜ்  முறைகேட்டாக, எந்த விசாரணையும் இன்றி இரவோடு இரவாக ஈரோடு மாவட்டத்திற்கு  இணை இயக்குனர் அவர்களால் மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    முறைகேடான மாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி

    மாபெரும் ஆர்பாட்டம்

    இடம்:  நாகர்கோவில் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு.

    நாள்: 25-03-2010, வியாழக்கிழமை

    நேரம்: மாலை 5 மணி

     தலைமை: தோழர் க. இசக்கியப்பன் 

    கோரிக்கையை வென்றிட....
    ஆசிரியப் பேரினமே!
    அணிதிரள்க!!
    ஆர்த்தெழுக!!!
    .

    8.2.10

    ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு மாநாடு

    தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மண்டல அளவிலான மறியல் நடத்துவது தொடர்பான ஆயத்த மாநாடு நாகர்கோவில் ஜெபமாலை திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்ட தொடர்பாளர் ஜான் பிரிட்டோ தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன், தனிஸ்லாஸ், சுரேஷ்குமார், ஆறுமுகம்பிள்ளை, வள்ளுவன் விவேகானந்தன், மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பட்டதாரி ஆசிரியர் கழக குமரி மாவட்ட செயலாளர் சி.ராஜன் வரவேற்று பேசினார். கூட்டமைப்பின் மாநில தொடர்பாளர் தம்பித்துரை, நிதி காப்பாளர்கள் நாராயணசாமி, சங்கரபெருமாள் உள்பட பலர் பேசினார்கள். சாமி சத்தியமூர்த்தி, வேதநாயகம், புண்ணியகோட்டி, அண்ணாமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளித்துணை ஆய்வாளர் பணியிடம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.

    * மாவட்ட கல்வி அதிகாரி பதவிகளை 100 சதவீதம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கே வழங்க வேண்டும்.

    * 1-6-2006 முதல் முறையான நியமனத்தில் கொண்டுவரப்பட்ட தொகுப்பு ஊதிய ஆசிரியர்களை அவர்களின் பணியேற்ற காலம் முதல் முறையான நியமனத்தில் கொண்டு வரவேண்டும்.

    * 6 முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், 6 முதல் 10-ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களை பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உட்படுத்த வேண்டும்.

    * ஏழை மாணவர்களும் பயன்பெறும் வகையில் சமச்சீர் கல்வியை மாற்றம் செய்து அறிவிக்க வேண்டும்.

    மேற்கண்டவை உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    .

    7.2.10

    தென் மண்டல மறியல் ஆயத்த மாநாடு - படங்கள்

    தென் மண்டல மறியல் ஆயத்த மாநாடு - ஆலோசனைக் கூட்டம்

    6 முதல் 10 வரை கற்பிக்கும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல மறியல் ஆயத்த மாநாடு - ஆலோசனைக் கூட்டம் அரசு ஊழியர் சங்க இல்லத்தில் தலைமை ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் பால்ராஜ் தலைமையில் நடந்தது.

    தொடர்பாளர் ஜாண் பிரிட்டோ, அமைப்பாளர் தனிஸ்லாஸ், நிதிக்காப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 10 அம்சக் கோரிக்கைகள் குறித்து விருதுநகர் மாவட்டத்தொடர்பாளர் மோகன சுந்தரம், தூத்துக்குடி மாவட்ட தொடர்பாளர் விவேகானந்தன் ஆகியோர் விளக்கவுரை தந்தனர்.

    வருகிற பிப்ரவரி 7-ம் தேதி மாநிலத் தீர்மானப்படி குமரி மண்டல மறியல் ஆயத்தமாநாடு நடத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலிருந்து தலா 500 பேர் வீதம் கலந்து கொள்வதாக தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.

    குமரி மாவட்ட இயக்க பொறுப்பாளர்களான ஈஸ்டர் அமல்ராஜ், முத்தையா ஆசாரி, வேலவன், ஜோஸ் டைட்டஸ்,செம்பியன், கிருஷ்ணசாமி சாம்சுதாகர், பாசி, சுரேஷ்குமார், சித்தார்த்தன், பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராஜன் நன்றி கூறினார்.
    .

    மண்டல வாரியாக மறியல் ஆயத்த மாநாடு

    உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பு சார்பில் மண்டல வாரியாக மறியல் ஆயத்த மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. மாநில பொதுசெயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். தமிழக தமிழாசிரியர் சங்க மாநில ஆலோசகர் சின்னப்பாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட தொடர்பாளர் மணிகண்டன் வரவேற்றார். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பாஸ்கரன், மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் முருகேசன் அசோக்குமார், பாண்டித் துரை, பாலுச்சாமி, அருணாசம்பந்தன் பங்கேற்றனர்.

    மாவட்ட கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பணியிடங்களை முழுமையாக உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கே வழங்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு விகிதாச்சாரம் பற்றிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும். உயர்நிலைப் பள்ளிக்கென தனி இயக்குனரகம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியறுத்துகின்றனர்.

    இதன் ஒரு கட்டமாக, மண்டல வாரியாக மறியல் போராட்டத்திற்கான ஆயத்த மாநாட்டை நடத்த முடிவெடுத்தனர். இதன்படி கன்னியாகுமரி மண்டலத்தில் பிப். 7ம் தேதியும், மதுரை மண்டலத்தில் பிப். 14ம் தேதியும், திருச்சி மண்டலத்தில் பிப். 21ம் தேதியும், சேலம் மண்டலத்தில் பிப். 28ம் தேதியும், சென்னை மண்டலத்தில் மார்ச் 7ம் தேதியும் இந்த கூட்டங்கள் நடைபெறும்.

    கூட்டமைப்பின் நிதிக் காப்பாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.
    .

    பிரபலமான இடுகைகள்

    தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்