தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

8.2.10

ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு மாநாடு

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மண்டல அளவிலான மறியல் நடத்துவது தொடர்பான ஆயத்த மாநாடு நாகர்கோவில் ஜெபமாலை திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்ட தொடர்பாளர் ஜான் பிரிட்டோ தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன், தனிஸ்லாஸ், சுரேஷ்குமார், ஆறுமுகம்பிள்ளை, வள்ளுவன் விவேகானந்தன், மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பட்டதாரி ஆசிரியர் கழக குமரி மாவட்ட செயலாளர் சி.ராஜன் வரவேற்று பேசினார். கூட்டமைப்பின் மாநில தொடர்பாளர் தம்பித்துரை, நிதி காப்பாளர்கள் நாராயணசாமி, சங்கரபெருமாள் உள்பட பலர் பேசினார்கள். சாமி சத்தியமூர்த்தி, வேதநாயகம், புண்ணியகோட்டி, அண்ணாமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளித்துணை ஆய்வாளர் பணியிடம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.

* மாவட்ட கல்வி அதிகாரி பதவிகளை 100 சதவீதம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கே வழங்க வேண்டும்.

* 1-6-2006 முதல் முறையான நியமனத்தில் கொண்டுவரப்பட்ட தொகுப்பு ஊதிய ஆசிரியர்களை அவர்களின் பணியேற்ற காலம் முதல் முறையான நியமனத்தில் கொண்டு வரவேண்டும்.

* 6 முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், 6 முதல் 10-ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களை பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உட்படுத்த வேண்டும்.

* ஏழை மாணவர்களும் பயன்பெறும் வகையில் சமச்சீர் கல்வியை மாற்றம் செய்து அறிவிக்க வேண்டும்.

மேற்கண்டவை உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்