தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

5.4.10

இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உட்படுத்த வலியுறுத்தி தர்ணா - ஆர்பாட்டம்

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் நாகர்கோவிலில் சனிக்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 28 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உள்படுத்தும் கோரிக்கையை கல்வி மானியத்தில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.  

நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் சேம்பிரின்ஸ் குமார்,  நிம்ரோத், சந்தன கருப்பையா ஆகியோர் தலைமை வகித்தனர்.  அமிர்தராஜ், தமிழ்ராஜன், ரவிச்சந்திரன், திவாகரன்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சுந்தர்ராஜ், முருகேசன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.  மாநில இணைச் செயலர் பாஸி, துணைத் தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  மாநில பொருளாளர் உதயசூரியன் நிறைவுரையாற்றினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்