தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

18.4.10

தமிழாசிரியர் பணி மூப்பு பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கிடுக.

பெறுநர்:

பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அவர்கள்,
பள்ளிக்கல்வி இயக்ககம்,
சென்னை - 6.

மதிப்புமிகு அய்யா,

பொருள்: 

கல்வி - பள்ளிக்கல்வி - இடைநிலைக்கல்வி - இடைநிலை ஆசிரியர் - பதவி உயர்வு தமிழாசிரியர் பணி மூப்பு பட்டியல் - 1995 ஆசிரியர் தேர்வு வாரிய ஆசிரியர்கள் அனைவருக்கும் வழங்கிட நடவடிக்கை கோருதல் - சார்பு.

2010-2011ஆம் கல்வியாண்டில் உயர் மேல் நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் தமிழாசிரியர் பதவி உயர்வுக்கு 756 பேர் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் 1995ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் முலம் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் அனைவரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. தரஎண்.12136 வரையும் 31-08-1995 வரை நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பட்டியல் இடம் பெற்றுள்ளது.

ஆனால் கடந்தவாரம் உயர்-மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்க கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது 1032 தமிழாசிரியர் பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளது. அதில் 66.66% எனில் 687 பேருக்கு மட்டுமே தமிழாசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

1995-ல் தேர்வு வாரியம் முலம் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் வெளியிடப்பட்டுள்ள 756 பேருக்கும் தமிழாசிரியர் பதவி உயர்வு வழங்கிட ஆவன செய்திருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இவண்,
(ஒப்பம்)
மாநில நிர்வாகிகள்.

இடம்: சென்னை,
நாள்:12-04-2010.
.

1 கருத்து:


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்